பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

தொல் தமிழ்ப் பழங்குடியினரின் வாழ்வமைதிகள், பெரும்பாலும் அவரவர்தம் வாழ்விடத்தின் நிலப்பாங்கையும், அந் நிலப்பாங்கிலே வாழ்வியல் நடாத்திய உயிரினங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், மற்றும் அமைந்த பலவான வளங்களையும் தழுவிச் செல்வவாகவே அமைந்திருந்தன.

அறிவொளி எழுந்து வளர்ந்து. மக்கள் தம்முள்ளே ஒன்றுகூடி, ஊரும் சேரியுமாகச் சேர்ந்து இருந்து வாழத்தொடங்கிச், சமுதாய நெறிமுறைகளும் வகுக்கப்பெற்று, வாழ்வியல் செம்மைபெற்றுச் செழித்தபோதும், மேற்கூறிய நிலந்தழுவிய, சுற்றுச்சூழல்களைத் தழுவிய வாழ்வுப்போக்கே, அனைத்துக்கும் உள்ளீடாக நிற்கும் உணர்வாக அமையலாயின.

இந் நிலையிலே, 'நெய்தல்' என்பது, கடலும் கடல்சார்ந்த இடமும் தனக்குரிய நிலமாக அமைய அங்கு வாழ்வியல் கண்டாரான மீன்பிடிப்பாரும், உப்பு விளைப்பாருமாகிய மக்களின் வாழ்வியலைத் தழுவிச் செல்லும், வாழ்வியல் ஒழுக்கமாக அமைந்ததாகும்.

காலப்போக்கில், ஒவ்வொரு நிலத்துவாழ் மக்களிடமும், பிறப்பிற நிலத்துப் பொருள்களிலே செல்லுகின்ற ஆர்வமும் தோன்றி, அதுவே தேவையாகவும் மலர்ந்து வளர்ந்தபோது, ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழத்தொடங்கினர். அப்படி வாழ்ந்துவந்த மக்களிடையே, கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கப் பரிமாறல்களும் ஏற்படலாயின. இவ்வாறு கொள்வதும் கொடுப்பதுமாகிய தொழிலையே சிலர் வாழ்வியல் தாழிலாக மேற்கொண்டு, அதனால் பெரும் பயனையும் கண்டபோது, இதற்கெனவே வாணிக மக்களும்