பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. தாய்க்கு உரைத்த பத்து

இதன்கண் அமைந்தனவாம் பத்துச் செய்யுட்களும், 'தாய்க்கு உரைத்த'லாகிய ஒன்றே பொருளாக அமைந்துள்ளன. ஆதவின், இப் பெயர் தந்துள்ளனர். செவிலியும் தாய்போலவே அன்பும், உரிமையும், பொறுப்புணர்வும் மிக்கவள்; பழந்தமிழ் உயர்குடியினரின் குடும்பங்களில், குடும்பத் தலைவிக்கு உயிர்த்தோழியாகவும், அவளுக்கு அடுத்த நிலையிலே அனைவராலும் மதிக்கப் பெற்றவளாகவும் விளங்கினவள். அவளிடத்தே சொல்பவளும், அவள் மகளும், தலைவியின் உயிர்த்தோழியும் ஆகியவளே! செவிலியும் தோழியுமான இவ்விருவரும் தலைவியின் நலத்திலே எத்துணை மனங்கலந்த ஈடுபாட்டினர் என்பதையும் உணர்தல் வேண்டும். தன்னலம் அறவேவிட்டுத், தான் அன்புசெய்யும் தலைவியின் நலனே கருதும் இந்தத் தோழியும், தலைவியும், தமிழ் அகவிலக்கியங்களில் காணும் அருமையான தியாக சிகரங்களாகும். தலைவியின் களவுக்காதலைக் குறிப்பாகத் தன் தாய்க்கு உணர்த்தி, அத்தலைவனையே அவளுக்கு எப்படியும் மணம் புணர்க்கவேண்டும் என்னும் தோழியின் பேச்சாக அமைந்த இச் செய்யுட்களிலும், தன்னலமற்ற அந்த அன்புக்கசிவின் அருமையைக் காணலாம்; அகங்கலந்த நட்பின் உயர்வை உணரலாம்.

101. வந்தன்று தேரே!

துறை: அதத்தொடு நின்றபின்னர். வரைபொருட்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு புகுந்தவழி, தோழி, செவிலிக்குக் காட்டிச் சொல்லியது.

[து. வி.: களவிலே தலைவியோடு கூடிக்கலந்து ஒன்றுபட்ட தலைவன், அவளை வரைந்து முறையாக மணத்தாற் கொள்வதற்குத்,தமரிக்குத் தரவேண்டிய பொருளினைத் தேடி வரும் பொருட்டாகப் பிரிந்து, பிற புலம் சென்றான். அவள் பிரிவினாலே உளத்திற்படர்ந்த நோயும், பெற்றோர் வேற்று மணம் நாடுதலாலே பற்றிய துயரமும் பெரிதும் வருத்தத் தலைவி மிகச்சோர்ந்து மெலிகின்றாள். இந்நிலையிலே அவன்

ஐங் -- 12