பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

185


(தொல். களவு. 24). தலைவன் வரவறிந்தே ஒளிபெறும் இவள் நுதற்கவின், நொதுமலர் வரைவுநேரின் மீண்டும் கெட்டழியும் எனக் கூறித், தோழி அறத்தொடு நின்றதாக, இத் துறைக்கு ஏற்பப் பொருள் காணவேண்டும். அப்போது வரைவுக்குத் தமர் இசைதலை வலியுறுத்தியதாகவும் கருதுக.

106. அம் கலிழ் ஆகம்!

துறை: அறத்தொடு நின்ற தோழி, அது வற்புறுப்பான் வேண்டிச், செவிலிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவியின் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அத் தலைவனுக்கே அவளை எவ்வாறும் மணமுடிக்க வேண்டும் என அறத்தொடுநின்ற தோழி, மீண்டும் அதனை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

{{left_margin|3em|அன்னை வாழி! வேண்டு அன்னைi - அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்கடல் வளையினும் இலங்குமிவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே!

தெளிவுரை : வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக: அவர் நாட்டிடத்தேயுள்ள தோலடிப் பாதங்களையுடைய அன்னமானது. தன் துணையாகக் கருதி மிதிக்கும் குளிர்ந்த கடற்சங்கினும் காட்டில், வெண்மைபெற்று விளங்கும் இவளின் அழகொழுகும் மேனியையும் கண்டனை. இதனை நினைவிற் கொண்டேனும், நீதான் ஆவன செய்வாயாக.

கருத்து: 'அவளையன்றி இவள் நலமுறல் அரிது' என்பதாம்.

சொற்பொருள்: துதி - தோல்உறை. துதிக்கால் - தோல் அடி. துணை செத்து - துணைபோலும் எனக் கருதி. வளை - வெண்சங்கு. ஆகம் - மேனி; மிதித்தல் - மேலேறி மிதித்தல் : இது புணர்ச்சிக் குறிப்பும் ஆகலாம் எனினும், அது அறியா மயக்கமெனக் கொள்க.

விளக்கம்: 'மாமைக் கவின் பெற்ற இவள் மேனி, அவள் பிரிவாலே வளையினும் காட்டில் வெண்மை பெற்றதே! இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள்