பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



190

ஐங்குறுநூறு தெளிவுரை


கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத், தலைவனும் தன் நிலைமைபற்றி யாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும் காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவறமாட்டான் என்பதாம்.

நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் ஆதலின், நீருள்ளவரைக்குமே, அதுவும் செழித்துப் பூத்திருக்கும் என்பதும் உணர்வான். அவ்வாறே அவனோடு உடனுறையும் போதிலேதான் தலைவியும் மகிழ்ந்திருப்பாள் என்பதையும் அறிந்து, தன் சொற்பிழையானா விரைந்து வருவான், அவள்மேற் பெருங்காதலன்பினன் அவன் ஆதலின், என்பதுமாம்.

'அவன் எம்தோள் துறந்த காலையில், அவன் அளித்த பொழுதே பன்னாள் எவன்கொல் வரும்?' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச்செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ?' என, காலம் பொய்யாதே போல அவனும் பொய்யான் என்றதுமாம்.

மேற்கோள்: இத் துறையை இவ்வாறே காட்டி, இச் செய்யுளை நச்சினார்க்கினியரும் களவியல் உரையுள் காட்டுவர் - (தொல். களவு. 28).

110. வாழிய பாலே!

துறை: நொதுமலர் வரைவின்கண், தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[து. வி: களவிலே கலந்து இன்புற்று, அவனையே தன் கணவனாகவும் வரித்து, அவன் வரைவொடு வந்து தன்னைத் தமரிசைவோடே மணத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவ் வேளையிவே, அவளை மணம்பேச நொதுமலர் (அயலார்) வருகின்றனர். அது கண்டு, செவிலிக்கு அறத்தொடு நின்று உண்மையைச் சுட்டியுரைப்பாளான தோழி, சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]