பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



204

ஐங்குறுநூறு தெளிவுரை


தான் என்பதும் தெரிந்தோம். இனி நம் நிலை துயரேதான் போலும் என்று கூறுவதுபோலக் கூறியதாகக் வருந்திக் கொள்க. இதனைக் கேட்பவன், அவள்மேல் பேரன்பின்னாதலின் மேலும் காலம் நீட்டிக்காது வரைதற்கு முயல்வன் என்பதாம்.

நல்லவாயின தோளே!

துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், வந்து சிறைப்புறத்தானாகத், தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[து. வி.: வரைவுக்குக் குறித்த காலம் கழிந்தும் வரைவொடு வராதவன், களவுறவை நாடியவனாக வந்து, குறியிடத்தே இருப்பதறிந்த தலைவி, பெருகிய மனத்துயரோடு, அவனும் கேட்டுணருமாறு தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அம்ம வாழி, தோழி! நலமிக
நல்ல வாயின, அளிய மென் தோளே -
மல்லல் இருங்கழி மல்கும்

மெல்லம் புலம்பன் வந்த மாறே!

தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக: வளம்பெற்ற அரிய கழியினிடத்தே, நீர்வளம் மிகுந்து விளங்கும் நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவனும் வந்ததனன். அதனாலே, நலம்கெட்டு அளிக்கத்தக்கவாயிருந்த எம் மெல்லிய தோளகளும், நலம் மிகுந்தவாய்ப், பண்டேபோல் நல்லெழில் உடையவாயினவே!

கருத்து: 'இனி, அவன் வரைவொடு இனி வருவான்' என்பதாம்.

விளக்கம்: 'மணப்பின் மாணலம் எய்தித் தணப்பின் நெகிழ்ப தடமென் தோளே' என்று குறுந்தொகையும் (299) கூறும், செவ்வியாவே எழில்பெற்றன தலைவியின் தோள்கள் என்க, 'மாறு': ஏதுப்பொருள்படும் ஓர் இடைச்சொல். 'கழி நீர் அறல் விரியும்' எனப் பாடங்கொண்டு, 'கழிநீர் பெருகிப் பரந்து பலவிடமும் படர்தலாலே அறல்பட்டு அவ்விடங்களும் விளங்கும் என்றும் உரைக்கலாம். அவ்வாறே, அவன்