பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



224

ஐங்குறுநூறு தெளிவுரை


விளக்கம்: வரைவிடை வைத்த பிரிவென்று கொண்டு யான ஆற்றியிருப்பேன்.ஆயின், ஞாழலும் செருந்தியும் பூத்துப் பரந்த புதுமணமும், குளிர்ந்த நீர்த்துறையிலே அலைகள் என் மீது எறியும் நீர்த்துளிகளும், என் இன்பநினைவை எழுப்பி, என்னைப் பெரிதும் வாடுகின்றனவே என்கின்றாள் தலைவி, ஞாழல் செருந்தியோடு கமழ்கின்றது. யான் அவரோடு சேர்ந்து மணக்கவில்லையே என்றதும் ஆம்.

'கொன்றை பூச்சொரியும் காலத்தே தவறாது வரைவொடு வருவேன்' என்றவன், அக்காலம் வந்தும வராதானாக, அதுவரை ஆற்றியிருந்த தலைவி, பொங்கியெழும் பிரிவுத் துயரால் வாட்டமுற்றனள் என்பதும் ஆம்.

மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்கு, துறை இன்பமுடைத்தாகலான வருத்திற்று எனத் தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள் பாலை வந்தது (தொல். அகத். 9) என்பர் நச்சினார்க்கினியர்.

142. என் கண் உறங்காவே!

துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன், இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்கவேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.


[து. வி.: தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளலை வற்புறுத்திப் பல நாட் கூறியும், களவுறவையே வேட்டு, இரவுக் குறியிடத்தேயும் வந்து, தோழி அகன்று போவதற்குரிய ஒலிக்குறிப்பையும் செய்கின்றான் தலைவன். அதனைக் கேட்டாலும் கேளாதுபோல், தோழி, 'இப்படி உறக்கம் கெட்டால் நின் கதி யாதாகும்? நின் நலன் கெடுமே?; அதற்காகவேனும் அவனை மறந்து விடுவாய்' என்கிறாள் தலைவியிடம், அவள், தன் தோழிக்கு, அதற்கு விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது. இதனைக் கேட்பவன் வரைதலுக்கு விரைபவனாவான் என்பது தேற்றம்.]

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை

உள்ளேன் - தோழி!- படீஇயர் என் கண்ணே.