பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

ஐங்குறுநூறு தெளிவுரை


'நெக்க நெஞ்சம் நேர் கல்லேன்' என்பதற்கு, 'நெகிழ்ந்து வலியற்றுப் போயின நெஞ்சினளான யான். இனியும் அவனை விரும்பி ஏற்கும் ஆர்வநிலையினள் அல்லேன்' என்பதாகக் கொள்க.

உள்ளுறை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலும் என்று அருளோடும் காணச்சென்ற நாரையின் மடச்செயலைக் மலர்ந்தாற்போல குறித்துக் கண்போல் நெய்தல் நகையாடி இன்னார் உறவல்லளோ என்னும் அருளாற் சென்ற தலைவன், அப் பரத்தைபால் மயங்கி நடந்துகொண்ட நிகழ்ச்சியைக் குறித்து ஊர்ப்பெண்டிர் நகையாடினார் என்பதும், மலர்ந்த நெய்தலின் தேன்மணம் துறையிடமெங்கும் கமழ்தலே போல, அவர் கூறும் பழிச்சொற்களும் ஊர் எங்கும் பரவி நிறைந்தன என்பதும் உள்ளுறுத்துக்கூறி, அதனால் தலைவனைத் தான் ஏற்க மறுப்பதாகத் தலைவி கூறினதாகக் கொள்க.

மேற்கோள்: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது; திணை மயக்குறுதலுள் இப்பத்தும், நெய்தற்கண் மருதம் என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத். 12).

152. அறவன் போலும்!

துறை : தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையன்; ஆதலால், நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி வாயில் நேர்விக்கும் தோழிக்கு, அவள் சொல்லியது.

[து. வி.: பரத்தையாளனான தலைவனின் பொருட்டாக வந்த வாயில்களிடம், தலைவி இசைவுமறுத்துப் போக்கி விடுகின்றனள். அது கண்ட தோழி, அவன் பிழை யாதாயினும். அவன் நின்பால் அன்பும் உடையவன்; நின் உறவையும் விடாதே தொடர்பவன்; ஆகவே ஒதுக்காது, ஏற்றின்புறுத்தலே தக்கது என்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லும் விடையாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்று கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
அறவன் போலும்; அருளுமார் அதுவே!