பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிந்த கழியின் கண்ணே பரக்கும் துறைவன் ,என்னளவிலே தலைவிபால் காதலனாகவே தோன்றுகின்றான்; ஆனால், தலைவிக்கோ வேறாகத் தோன்றுகின்றனனே! அதற்கு யான் யாது செய்வேன்?

கருத்து: 'அவள் அவனைத் தானும் வெறுத்தனள்' என்றதாம்.

சொற்பொருள்: பதைப்ப - கோத. மறு - புள்ளி.

விளக்கம்: 'அன்னை' என்றது தலைமகளை; அவளின் மனைமாண்புச் செவ்வியறிந்து போற்றிக் கூறியதாகும். 'பதைப்ப' என்றது, தன் குஞ்சாகாமை நோக்கிப் பதைபுற்று என்றதும் ஆம். மறு - புள்ளிகள்.

"எனக்கோ காதலன் அனைக்கோ வேறே' என்றது. எனக்கு அவன் தலைவிபால் அன்புடையவன் என்பது கருத்தேயானாலும், அன்னையான தலைவியின் மீதோ அன்புமறந்து கொடுமை செய்தவனாயிற்றே என்பதாம். இதனால் அவள் ஏற்க இசையாள் என்று மறுத்துப் போக்கினள்.

உள்ளுறை : 'நாரை பதைப்ப வொழிந்த செம்மறுத்தூவி தெண்கழிப் பரக்கும்' என்றது. தலைவன் உறவாடிக் கழிக்க வாடிவருந்தும் பரத்தையரின் துயரமும், அவனை விரும்பினாள் மறுத்துவிட அவன் வருந்தும் வருத்தமும் ஊரெல்லாம் பரவிய அலராயிற்று என்பதாம்.

மேற்கோள்: பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிய ஒழுகா நின்றாய் என நெருங்கிய தோழிக்கு, 'யான் களவின்கண் மகப்பெற்றேன்' எனக் காய்ந்து கூறியது இது வென்பர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 6).


157. என் காதலோன் வந்தனன்!

துறை : பரத்தையிற் பிரிந்து வாயில்வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைமகள், புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது.

[து. வி.: பரத்தையிற் பிரிந்துபோன தலைவன் மீண்டும் தலைவியை மனந்தெளிவித்து அடைய விரும்பிப் பலரைத்