பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

245


தூதனுப்பி முயன்றும், அவள் தன் உறுதி தளராதிருக்கின்றாள். அப்போது, தெருவிலே விளையாடியிருக்கும் புதல்வனைத் தூக்கியபடி அவன் வருவான் என்று கேட்டு, அப்படி வரும் அவனை வெறுத்துப் போக்கமுடியாதே என அஞ்சுகிறாள். அவ்வேளையிற் புதல்வன் மட்டுமே விளையாடிவிட்டுத் தனியே வரக்கண்டவள், நிம்மதி பெற்றுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலை சேக்கும்
தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்

தான்வந் தனனெங் காத லோனே!

தெளிவுரை : வெள்ளாங்குருகின் பிள்ளையோ என்று காணச்சென்ற மடநடை நாரையானது, காலையிலேயிருந்து மாலைவரை அக் கானற் சோலையிலேயே தங்கும் குளிர்ந்த கடற்சேர்ப்பனான தலைவனோடும் சேர்ந்து, எம் காதன் மகன் வரவில்லை; அவன் மட்டுமேதான் தனியாக வந்தனன்!

கருத்து: 'ஒரு இக்கட்டிலே இருந்து விடுபட்டேன்' என்றதாம்.

சொற்பொருள்: சேக்கும் - தங்கும். 'காதலோன்' என்றது புதல்வளை. 'சேர்ப்பன்' என்றது தலைவனை. 'காலையிருந்து மாலை' என்றது, எப்போதும் என்னும் குறிப்பினதாம்.

விளக்கம் : புதல்வனை எடுத்துக் கொண்டு தலைவன் வீட்டினுள் வந்தால், தலைவியால் அவனைச் சினந்து பேசி ஒதுக்கமுடியாதென்பதும், புதல்வன் தகப்பனிடம் விளையாடிக் களிப்பதைத் தடுக்க இயலாது என்பதும், சூழ்நிலையுணராத புதல்வன் இருவரிடமும் கலந்துவிளையாடி மகிழத் தொடங்கின் அதனால் தானும் தலைவனுடன் நகைமுகம் காட்டிப்பேச நேரும் என்பதும் கருதி, தலைவி இவ்வாறு கூறி, மனநிம்மதி பெற்றனள் என்று கொள்க.

உள்ளுறை : காலையிலே சென்ற நாரையானது, மாலை வந்தும் கூட்டுக்குத் திரும்ப நினையாது தன் மடமையால் கழிக்கரை மரத்திலேயே தங்கிவிடும் தெண்கடற் சேர்ப்பன் அவன் ஆதலால், அவனும் நிலையாகப் பரத்தையர் இல்லிலேயே