பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

ஐங்குறுநூறு தெளிவுரை


உள்ளுறை : 'பண்டு வரும் காலத்தேபோலத் தவறாதே கதிரவனும், அவனால் செயப்படும் பொழுதும் வரினும், தானின்றி யான் வாழாமை தீரத் தெளிந்துளரெனினும், தலைவர் தாம் சொன்னாற்போலக் குறித்த காலத்தே வந்தனரிலரே' என்று, தலைவி ஏக்கமுற்றுக் கூறியதாகக் கொள்க. தன் வரவும் பிழைத்தான்; அதனால் தலைவி நலனும் கெட்டழியச் கேடிழைத்தான் என்க.

மேற்கோள்: பருவ வரவின்கண், மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது; நெய்தற்கண் மாலை வந்தது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத். 12). இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த நெய்தற் பாட்டு என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (நம்பி. ஒழிபு. 42.)

வேறு பாடம்: 'வருந்திக் கையறுமாறு, மாலை நெய்தலும் கூம்ப.'

குறிப்பு: தலைவனுக்கு நானிலத்தின் தலைமைகூறிப் பாலை மட்டும் கூறாமை அதன் உரிப்பொருளான பிரிதலைத் தலைவன் மேற்கொண்டதன் கொடுமையை நினைந்தென்றுங் கொள்க. மாலையிற் கூம்பும் நெய்தல் காலையிலே கதிர்தோன்ற மலரும்; தானோ அவரில்லாமையால் வாடிக்கூம்புதலே எப்போதும் உளதாவது என்றனளாகவும் கொள்க. 'களைஞரோ இலர்' என்றது, எவரும் அவனிருக்குமிடம் சென்று அவனைத் வரவுய்த்துத் தன்பால் துயரம் களைந்திற்றிலர் என்னும் வேதனையாற் கூறியது; அன்றிக் களையும் ஆற்றல் படைத்த காதலரோ அருகில் இலர் என்றதுமாம்.

நானிலத்தார்க்கும் நலஞ் செய்யும் பொறுப்புக் கொண்டவன், எளிமையாட்டியாகிய எனக்கு வந்து நலம் செய்திலனே என்று ஏங்கியதுமாம்.

184. கடலினும் பெரிய நட்பு!

துறை : வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

[து. வி.: வாயில் வேண்டி வந்தாரான தலைமகனின் ஏவலர்கள், தலைமகன் தலைவியிடத்தே கொண்டிருக்கும் மாறாத அன்புடைமைபற்றி எல்லாம் கூறி, அவனை அவள் உவந்து