பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

ஐங்குறுநூறு தெளிவுரை


அலரெழுமுன் மணவாழ்வாக மலரச்செய்வதற்குத் தோழி விரும்புகிறாள். ஒரு நாள் தலைவியை இல்லிடத்தே இருக்க வைத்துவிட்டுத், தான் மட்டும், தலைவனைச் சந்திக்கும் வழக்கமான இடத்துக்கு வருகின்றாள். தலைவியைக் காணாதே சோர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு,தலைவி இற்செறிப்புற்றாள் என்று கூறி, விரைய வரைதற்கு முயலுமாறு உணர்த்து கின்றாள். அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

நாரை நல்லினம் கடுப்ப, மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ!
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத்துறைப்
பல்கால் வரூஉம் தேர்' எனச்

'செல்லா தீமோ' என்றனள், யாயே!

தெளிவுரை : நாரையினது நல்ல கூட்டத்தைப்போல, நீராடிய மகளிர்கள் தம் நீரொழுகும் கூந்தலை விரித்துப் போட்டுக் கோதியும் தட்டியும் உலர்த்தியபடி இருக்கின்ற துறைக்குரியோனே! நீர் மிகுந்துள்ள கழியிடத்தேயுள்ள நெய்தல்கள் துளிகளைச் சிதறுமாறு, இத்துறையிடத்தே பலகாலும் ஒரு தேர் வருவதாகின்றது. ஆதலின், நீவிர் துறைப்பக்கம் செல்லாதிருப்பீராக' எனக் கூறிவிட்டனள் எம் தாய்.

கருத்து: 'இனித் தலைவியை இவ்விடத்தே நீயும் காண்பதரிது' என்றதாம்.

சொற்பொருள்: கடுப்ப - போல. நாரை நல்லினம் - நாரையின் நல்ல கூட்டம் : ’நல்ல’ என்றது மாசகற்றித் தூய்மை பேணுதலால், உளரும் - விரித்துக் காயவைக்கும். உறைப்ப - துளிப்ப.பல்கால் - பல நேரங்களில்.

விளக்கம்: 'இத்துறைப் பல்கால் தேர் வரூஉம்' எனக் கேட்ட தாய், நீவிர் செல்லாதீர் என எம்மைத் தகைத்தனள் என்றது, அவள் எம்மை இற்செறித்தனள்; இனிக் களவுறவு வாய்த்தல் அரிது; இனி மணந்துகோடற்கு விரைக என்று அறிவுறுத்தியது ஆகும்; நின் தேரெனவும், நீயும் தலைவியை நாடியே வருகின்றாயெனவும் தாய் குறிப்பாலே கண்டு ஐயுற்றனள் என்பதும் ஆம். களவுக்காலத்தும். இப்படிப் பலரறியத் தேரூர்ந்து வரலும் தலைவர்கள் இயல்பு என்பதும், அதனால் அவர் தொலைவிடத்துப் பெருங்குடியினராதல்