பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

ஐங்குறுநூறு தெளிவுரை


கொற்கைக் கோமான் - பாண்டியன்; அவனுக்குரிய பேரூர் என்பான், 'கொற்கைக் கோமான் கொற்கை' என்றனன். அறம் குன்றாப் பாண்டியரின் ஆட்சிக்குட்பட்ட கொற்கையிலே மகளிரும் தம் மனையறத்திலே குன்றாது விளங்கும் மாண்பு உடையவர் என்றதுமாம்.

உள்ளுறை: 'இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்' என்றது, தான் பரத்தையர் சேரியிலே பரத்தரோடும் பாணரோடும் கூடிச்சென்று, அழகியரான பரத்தையரைத் தேடித் தேடி நுகர்ந்த இழிசெயலை உள்ளுறுத்து, நாணத்தாற் கூறியதுமாம்; தலைவியின் இல்லறச் செவ்வியினை வியந்து போற்றித் தன் எளிமைக்கு நாணியதுமாம்.

189. நல்ல வாயின கண்ணே!

துறை : வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன்; வரைவான் வந்துழிக் கண்டு,உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாயின தலைவிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடி வரப் பிரிந்தான். வருவதாக உரைத்துச் சென்ற காலத்தும் அவன் வந்திலன், அதனால் வாடி நலிந்தாள் தலைவி. அவள் வாட்டங்கண்டு கவலையுற்றுச் சோர்ந்தாள் தோழி. ஒரு நாள், அவன் வரைவொடும் வருகின்றான். தோழியின் கண்களிலே மகிழ்ச்சி எழுந்து கூத்தாடுகின்றது. தலைவியை நோக்கிப் போகின்றாள். தலைவி தோழியின் மகிழ்ச்சிக்குக் காரணம் யாதென்று வினவ, அவள் விடையளிப்பதாக அமைந்த செய்யுள் இது.]

புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென

நல்ல வாயின தோழி என் கண்ணே!

தெளிவுரை : தோழி! புன்னையின் நுண்மையான பூந்துகள்கள் படிந்து கிடக்கும் நெய்தல் மலர்கள், பொன்னிடைப் படுத்த நீலமணிகள்போல அழகுடன் காணப்படுகின்ற, மெல்லிய கடற்றுறைக்குரியோனும், வரைவின்