பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

305


மேற்கோள்: "இடந்தலைப் பாட்டில் தலைவி நிலைகண்டு கூறியது; இது திணை மயக்குறுதலுள் நெய்தலிற் புணர்தல் நிமித்தம்" என்று எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல், அகம், 12). 'தலைவன் இவ்விடத்து இவ்வியற்று என்றல்' என்பர் நம்பியகப்பொருள் உரைகாரர் - (களவு. 21.)

பாடபேதம்: 'ஆயத்து நின்றோளே' - இது இன்னும் சிறப்புடையதாகும். ஆயமகளிர் சூழ நிற்பவள் இவ்வாறு தலைவனுக்குக் காதற்குறிப்புக் காட்டினள் என்பது இதன் பொருள் நிலையாகும்.

198. நெடுந்தோள் அண்ணலைக் கண்டேன்!

துறை: பரத்தையர் மனைக்கண் பன்னாள் தங்கிப், பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[து. வி.: பலநாட்கள் பரத்தையரின் உறவிலேயே ஈடுபட்டு, அவர் வீடுகளிலேயும் தங்கியிருந்தான் தலைவன். அவர் உறவிலே இன்புறும்போதெல்லாம், சில சமயங்களில், தலைவியின் உளங்கலந்த அன்புநெகிழ்வின் செவ்வியும், பரத்தையரின் போலியான நடிப்புணர்வும், அவனுள்ளத்தே நிழலாடுகின்றன. அவளை நினைந்து பெருகிய ஏக்கமும் எழுகின்றது. அவளை அடையாத ஆற்றாமையும் அரும்பி மிகுகின்றது. தன் மடமைக்கு நாணியும், அவளின் மாண்பினை நம்பியும், தன் வீடுநோக்கி வருகின்றான். அவனை எதிர்ப்பட்ட தோழி வந்து, தலைமகட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வளையணி முன்கை வாலெயிற் றமர்நகை
இளைய ராடும் தளையவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற

நெடுந்தோள் அண்ணற் கண்டிகும் யாமே!

தெளிவுரை : வளைகள்: அணிசெய்திருக்கும் முன்னங்கையினையும். வெண்பற்களிடையே தோன்றும் விருப்பூட்டும் இளநகையினையும் கொண்டோரான இளமகளிர்கள், விளையாடியிருக்கும் முறுக்கவிழ்கின்ற மலர்களையுடைய கானற் சோலையிடத்தே, 'குறுந்துறை எவ்விடத்ததோ?' என்று நம்மை அந்நாவிலே வினவியவாறு நின்ற, நெடுந்தோளின்னான் நம்

ஐங். --20