பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

ஐங்குறுநூறு தெளிவுரை


வும் கருதலாம். 'எல் வளை' என்றது, வளையைச் சுட்டி, அஃது ஒலியெழுப்பத் தாயர் விழித்துவிடல் நேராவாறு, விழிப்பாக எழுக' என்று குறிப்பாகச் சுட்டியதும் கொள்க.

பாடபேதம் : 'விலங்கரி நெடுங்கண் நெகிழ்மதி' என்பதற்குப் பதிலாக, நெடுங்கண் அனந்தல் தீர்மதி' எனவும் பாடம்.

மேற்கோள்: 'இதில் அனந்தல் தீர' உடன் கொண்டு போதற்கு வந்தானெனப் பாயல் உணர்த்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல், அகத், 39).

ஆசிரியர் அம்மூவனார் பாடியவும், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தவுமான, நெய்தல் திணையின், ஐங்குறுநூற்றுச் செய்யுட்கள் நூறும் இதனோடே முடிந்தன.

இவற்றுள் 129, 130 ஆம் செய்யுட்கள் கிடைத்தில. முதல் நான்கு பத்துகளும் கேட்போர் பொருளாகவும், பிற ஆறும் கருப்பொருள் பொருளாகவும் அமைந்துள்ளன.

நெய்தலின் பல்வேறான தன்மைகளையும், நெய்தல் மக்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளையும், அவர்களுட் காதல் வயப்பட்டார் பல்வேறு நிலைகளிலே கொள்ளும் நினைவுச் சிதறல்களையும், ஒரு கருத்தை நயம்படச் சொல்லும் சொல்லின் திறத்தையும் இச் செய்யுட்கள் நன்கு ஓவியப் படுத்திக் காட்டுகின்றன.