பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



68

ஐங்குறுநூறு தெளிவுரை


உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்,
தண்சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஓண்தொடி நெகிழச் சாஅய்,

மென்தோள் பசப்பது எவன்கொல்?- அன்னாய்!

தெளிவுரை : "அன்னையே! 'நீருண்ணும் துறையிடத்தேயுள்ள அணங்குதான் இவளிடத்தே நீங்காது தங்கியிருக்கும் நோய்க்குக் காரணம் என்று நீயும் நினைப்பாய்' என்றால், ஒள்ளிய தொடியானது நெகிழ்ந்துபோக மெலிவுற்று. இவளது மென்மையான தோள் பசந் நிற வேறுபடுவதும் எதனாலோ?"

கருத்து : இது, உளத்தே கொண்ட காதல் நோயின் வெம்மைத் தாக்குதல் என்பதாம்.

சொற்பொருள்: உண்துறை - நீருண்ணும் துறை; உண்ணு நீர் எடுக்கும் நீர்த்துறை, நீர்த்துறையிடத்தே அணங்கு உளதாதலைப் பிறரும் கூறுவர் (முருகு. 224; அகம், 146, 240.). உறைநோய் - செயலற்றவளாக நீங்காதே தங்கியிருக்கும் காமநோய்: 'உறுநோய்' என்பதும் பாடம். வரிக்கும் - கோலம் செய்யும். 'தொடி நெகிழத் தோள் சாய்' என்பதனை, 'தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே' (குறுந். 239) என்பதனாலும் அறிக. தோள் பசத்தலைப் பிறரும் கூறுவர்: 'தாம் பசந்தன என் தடமென் தோளே' - (குறுந். 121). விளக்கம் : உண்டுறை யணங்கு இவளுறை நோயாயின் என்றது. அன்னையும் பிறரும் கொண்ட முடிவைத் தான் எடுத்துச் சொல்லி மறுக்க முனைவதாகும். தோள் பசப்பது' நோக்கி, இவள் நோய் காமநோயாதலை உணர்க எனக்கூறி, வெறிவிலக்கி, அறத்தொடு நின்றனள் தோழி என்க.

உள்ளுறை: அலவன் வரித்தலாலே தண் சேறும் அழகுற்றுத தோன்றுமாப்போலே. தலைவன் வரைந்து வந்து இவளை கோடலால் இவளும் இந் நலிவின் நீங்கிப் புதுப்பொலிவு அடைவாள் என்பதாம்.

29. நின் மகள் பசலை ஏனோ?

துறை : வரைவெதிர் கொள்ளார் தமர். அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[து. வி.: தலைமகனுக்கு உரியார் வரைந்து வரவும். தலைவியின் தமராயினார் அதனை ஏற்காது மறுத்தனர். அப்போது