பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5




நூறுநூ றெனவோர் திணைக்குமே யாகக்
கூறுவீர் தனித்தனிக் கொணர்வீர் மாந்தரன்
தகுதியின் மிக்கவை தமக்குப்பல் பரிசுகள்
மிகுதியின் அளித்தே மேவுவன் என்றனர்!

அவர்தாம் அங்ங்னம் ஆக்கின ஆய்ந்தே
இவைதாம் ஐந்தும் ஏற்றன வென்றே
கொண்டனர் கூடலூர்க் கிழாருமந் நாளே!
கொண்டது சங்கமும் குதுகலத் தோடே!

அத்தொகை,

ஒரம் போகியார் உரைத்தநல் மருதமும்
சீரம் மூவனர் செப்பிய நெய்தலும்
கோதிலாக் கபிலர் கூறிய குறிஞ்சியும்
ஒதல் ஆந்தையார் உரைதமிழ்ப் பாலையும்
பேயனார் பெரிதுவந் தளித்தநல் முல்லையும்
ஆயவைங் கூறென அமைந்த செல் அணியே!

அவற்றுள்,
நீர்வளம் தன்னால் வயல்வளம் மிகுத்தே
சீர்நலம் சிறந்தொளிர் செல்வநல் மருதமும்
பெருங்கடல் சார்ந்துவாழ் பீடுடைப் பரதவர்
விரும்பிவாழ் நெய்தலின் விளங்குபன் னலமும்
அழகுறச் செப்புமச் செயுளிரு நூறும்
தெளிவுறத் தெளிவுரை பிறகுறிப் போடே
அமைந்ததித் தெளிவுரை அன்பரின் பொருட்டே!

இதனைத்,
தாள்விலை தான்தொடர் செலவினம் பலவும்
ஏழ்நிலை மேலென வேறிய போதினும்
தமிழ்நலம் நினையும் தம்முளத் தகையால்
அமிழ்தின் இனியசெந் தமிழ்க்கணி என்றே
உவந்தினி தச்சிட் டுதவமுன் வந்தே
தவமிகு தமிழர்தம் தனிமாண் பெல்லாம்