பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



74

ஐங்குறுநூறு தெளிவுரை


யும் மிகுதியாகவுடைய, பெரிய நீர்த்துறையிடத்தே, நம் தலைவன், குளிர்ந்த தாரணிந்த தன் மார்பினைப் பரத்தையரிதலைக்குத் தலை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றிக்கொண்டு நீராடி இன்புற்று மகிழுமாறு தந்து, அவருடன் கூடிக் களிப்புடன் நீராட்டயர்வான் என்பார்களே!

கருத்து: 'அவ்வாறு பலராலும் விரும்பித் தழுவப்படும் நம் தலைவனுக்கு. நம்முடையதான உறவுதான் இப்போதிலே தேவையற்றதல்லவோ' என்று கூறி, வாயில் மறுத்ததாம்.

சொற்பொருள்: 'தலைத்தலைக் கொள' என்றது, தலைக்குத் தலை வந்து பற்றிக்கொள்ள. அவன் அதனால் களிப்பும், எவர்க்குத்துணையாவது என்றில்லாது பற்றினார்க்கெல்லாம் துணையாகும் இன்பமயக்கமும் கொள்வான் என்றற்காம். 'விரிபூம் பெருந்துறை' என்றது, கரைக்கண் மரங்கள் உதிர்த்த பூக்களும், நீராடுவார் கழித்த பூக்களுமாகப் பெருகிப் பரந்து, நீரையே மேற்புறத்தே மூடிக்கொண்டிருக்கும் தன்மையுடைய பெரிய நீராடுதுறை என்றற்காம். இதனால், இவன் ஆடிய ஆட்டத்தை ஊராருட் பலரும் காண்பர் என்பதும், அவன் அதனையும் நினையாத நாணிலியாயினான் என்று நொந்ததும் கொள்க. 'வவ்வு வல்லார் புணையாகிய மார்பினை' என்று அவருள், பிறரை ஒதுக்கிப் பற்றிக் கொள்ளும் வல்லமையுள்ளவளுக்குப் புணையாகி மகிழும் மார்பினை உடையனாயினை என்று, பரிபாடல் இவ்வாறு ஒரு காட்சியை மேலும் நயப்படுத்தும் (பரி. 6).

34. ஆம்பல் வண்ணம் கொண்டன!

துறை : இதுவும் மேற்செய்யுளின் துறையே!

அம்ம வாழி, தோழி, நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்
தாதேர் வண்ணம் கொண்டன

ஏதிலா ளர்க்குப் பசந்த, என் கண்ணே!

தெளிவுரை : தோழி, கேட்பாயாக; நம்மிடத்தே அன்பற்றவனாகவே ஒழுகிவரும் தலைவனின் பொருட்டாகப் பசப்புற்ற என் கண்கள், பொய்கையிடத்தே பூத்த, புழைபொருந்திய

தண்டினையுடைய ஆம்பற் பூவின் தாதுபோலும் நிறத்தையும் கொண்டனவே! அதுதான் ஏனோ?