பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262, ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பல பொழில்களுக்கும் சென்று, ஆங்கு மலர்ந்து தேன் நிரம்பி கிற்கும் பூத்தொறும் தேனே வெறிக்கவுண்டு, அவற் றை வெறுத்த வண்டினம், இவள் கூந்தலில் மொய்த்து முதலு கின்றன என்பாள், பல்பொழில் தாதன வேறக்கைய வாகி இவள் போதவிழ் முச்சி யூதம் என்ருள். எனவே, பொழிற் பூக்களே வெறுத்தமையால் வண்டினம் மனங்கருதி இவள் போதவிழ் முச்சியினை நயந்தனவே ய ன் றி ப் பிறிதில்லை யெனச் செவிலிக்கு விடையிறுத்தவ ருயிற்று. அற்றேல், மோரோடமும், ஆம்பலும் இத்தகைய மணங்கமழுவன வுள வேயெனின், அவையும், எருமையின் ஏற்றினம் மேய்ந்து ஒழிந்தமையின் இலவாயின என்பாள், எருமை கல்லேற்றினம் மேயலருக்தேன, பகமோரோடமோ டாம்பல் ஒல்லா என்ருள். மோசோடம் மகளிர்கூந்தலின் மாைங்கமழும் என்பது, 'கறு மோரோடமோ டேனெறித் தடைச்சிய, செப்பிடக் கன்ன காற்றம் தொக்குடன், அணிகிறங் கொண்ட மணிமரு ளைம் பால், தளர்தலுங் கதுப்பு' (நற். 387) எனவரும் நற்றினப் பாட்டாலும், ஆம்பலின் மனமும் அத்தகையதே என்பது, "ஆம்பல்காறும் தேம்பொதி நிறுவிரை' * (சிலப். 4 : 73)

  • அன்ன மென்னடை கன்னிர்ப் பொய்கை, ஆம்பல் நானும் கேம்பொதி நறுவிசைத், தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கடந்தல்” எனவரும் இதற்கு, அரும்பதவுரைகாரர், 'அன்னமாகிய மென்ன 9டயினையும், ஆம்பல் சாறும் நறுவிரையையும், தாமரையாகிய செவ் வாயையும், அறலாகிய கூத்தலேயு முடைய பொய்கையாகிய பெண்' என்மூர். எனவே, இகன்கண் கூறிய நடை, விரை, வாய், கூந்தல் என்ற இவற்றிற்கு முறையே அன்னமும், ஆம்பலும், தாமரையும், அறலும் உவமைகளாக ன்ேறனவாம். இனி ஆசிரியர் அடியார்க்குதல் லார், தேம்பொதி நறுவிசை ஆம்பல் சாறும் தாமரை யென இயைக் துப் பொருள்கொள்வர்: 'இனிக் கேம்பொதி நிறுவிரைத் தாமரை யாகிய ஆம்பல் காறும் செவ்வாய் எனினுமமையும்’ என உாைவிகற் பமும் கூறுவர். எனினும், இவ்வைக்குறுநூற்றுப் பாட்டின் கருத் தைரோக்கின், அரும்பதவுரைகாரர் கூறுவதே உண்மையுரையா தல் விளங்குகிறது. இஃது அறிஞர் ஆராய்ச்சிக் குளியதொன்று.