பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்

வடநூலார் அறம் பொருள் இன்பம் வீடென வகுத்துக் கூறும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் தமிழ் நூலார் அகம் புறமென இரண்டாகப் பகுத்துக் கூறுவது மரபு, மக்களது வாழ்க்கையின் இயல்பறிந்து அகவாழ்க்கை, அறவாழ்க்கை என, அதனைப் பண்டையோர் இரண்டாகப் வகுத்தது எத்தனை அறிவு நுண்மை வாய்ந்ததாக உள்ளது.

இவ் ஐங்குறு நூற்றிலிருந்து பல பாட்டுக்கள், தொல்காப்பிய உரையாசிரியர்களாலும் பிற அகப்பொருள் இலக்கண உரையாசிரியர்களாலும் பல நுண்ணிய அகப்பொருள் இலக்கண விதிகட்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆங்காங்கு எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன. இதனால் இந்நூலின் பெருமை நன்கு புலப்படும்.

இந்நூல், அன்பின் ஐந்திணையாகிய முல்லை, குறிஞ்சி,மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணையும் தனித்தனி உணர்த்துவதாய்த் திணை யொன்றுக்கு நூறு நூறு குறுகிய அடிகளையுடைய பாட்டுக்களை கொண்டு விளங்குகின்றதாலின், ஐங்குறுநூறு எனப் பெயர் பெறுவதாக அமைந்தது. இந்நூற்பாக்கள், மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஆசிரியப்பாக்களாகும். தொல்காப்பியர் கலி, பரிபாடல் என்னும் இருவகைப் பாக்களுமே அகப்பொருளுக் குரியன வென்று விதிப்பாரேனும்* இவ் முதன்முறை பிற்காலத்துப் பிறழ்ந்து, ஆசிரியம், வெண்பா முதலிய பாக்களாலும் பாடுதல் என்பது பெரு வழக்காகி விட்டது. இதனைத் தொகைநூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் கண்டுணரலாம்.

இந்நூலிலுள்ள ஐந்திணை களையும் பாடிய புலவர்கள் ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஒதலாந்தையார், பேயனார் என்போர். இதனை,

  • "நாடக வழக்கிலும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு மருங்கினும் உரிய தாகு மென்மனார் புலவர்.”

(தொல். அகம்.ருங)