பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை


பேராசிரியர், செஞ்சொற்புலவர்,
ஆ, கார்மேகக்கோனார் அவர்கள்)


தோற்றுவாய்


திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆம் தண்டமிழ் மொழிக்கண்ணுள்ள பண்டைப் பணுவல் பலவற்றுள் சங்கத் தொகை நால்களான நற்றினை முதலிய நூல்களின் நுண்பொருள்களை, கற்றவல்ல புலவர்களே யன்றி மற்றுமுள்ளோரும் எளிதின் அறிந்து இன்புற வேண்டுமென்ற உயரிய நோக்குடன், தொகை நூல்களின் மாநாடுகள் பல கூட்டித் தொன்னூ லாராய்ச்சித் திறன் வாய்ந்த புலவர் பெருமக்கக்ளைக் கொண்டு சொற்பொழிவு செய்வித்துத் தமிழ்த்தாய்க்கோர் நற்றொண்டாற்றி வருகின்றது. இம் முறையில் இவ்வைங்குகுளுநூற்று மாநாடுட்டுடன் தொகை நூல் மாநாடு ஒன்று குறைய எட்டு நடைபெற்றவிட்டன. இக் கழகத்தின் இவ் வரும் பெரும் செயல், தமிழ்மக்கள் அனைவாராலும் நன்கு போற்றிப் பாராட்டத் பாலது.

நம் தமிழ்காட்டில் இற்றைக்கு 2000 ஆண்டுகட்கு முன்னர்த் திகழ்ந்திருந்த புலவர் பெருமக்கள் இயற்றிய செய்யுட்கள், பல்லாயிரக் கணக்காகப் பல்கியிருக்தும் பிந்தைநாளில் மூவேந்தர் ஆட்சி நீங்கியபின் வேற்றரசர் ஆட்சியில் அவை ஒவ்வொன்றாக நாட்டிற் பயிற்சி குன்றி ஏட்டில் கிடந்து, சிதலும் பூச்சியும் தின்று, மறைந்தொழிந்தவை போக இன்று எஞ்சியிருப்பவையும் ஆயிரக் கணக்காக உள்ளன. இப்பாட்டுக்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியவைகளும், சித்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய