பக்கம்:ஐந்திணை வளம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஐந்திணை வளம் - "வழிபாடு கொள்ளும் வனவயல் ஊரன் என்று அவன் தன்னுடைய பெருநிலையை மறந்து பணிந்து வேண்டிநின்ற எளிமையினை நினைவுறுத்துகின்றாள்.'பழிபாடு நின் மேலது’ என்று, அவனோடு ஊடிச் சினந்து கொள்ளும் ஒழுக்கத்தை நீட்டியாது, அவனை ஏற்றுக்கொள்ளுதலை வேண்டுகின்றாள். 12. ஊர தகுவதோ? தலைவிபால் வந்து இப்படிப் பலபடக்கூறி வேண்டி நிற்கும் தோழி தலைவன் மேற்கொண்டபழியுடைச் செயலான பரத்தைமை உறவினை மறந்துவிட்டவளும் அல்லள். அவன்பாற் சென்று, நயமாக, அவனது போற்றா ஒழுக்கினைக் கண்டித்தலையும் மேற்கொள்ளுகின்றாள். 'தடாகத்திடத்தே உண்டு அதனிடத்தாகவே வாழ்கின்ற இயல்பினையுடைய வராஅல் மீன்களின் கூட்டமானது அவ்விடத்தேயே திரிந்துகொண்டும் இருப்பனவாம். அத்தகைய தண்மையான இடங்களையுடைய ஊருக்கு உரியவனே!" 'ஒள்ளிய தொடியினளான நின் தலைவியினது நிலையினைப்பார்ப்பாயாக' 'இவள் மனையைவிட்டுநீங்கி,பரத்தையர் வாழும் அந்தச் சேரிநோக்கிச் செல்வதனைப் பெரியதொரு செயலாக மேற்கொள்ளுதல், நினக்குத் தகுதியாகுமோ? அது நினக்கு இழிவேயாதலால், அதனைக் கைவிடுக’ என்றாள் தோழி உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்பிரியும் தண்டுறை யூர தகுவதோ-ஒண்டொடியைப் பாராய் மனைதுறந்தச்சேரிச் செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல். 'வராஅல் இனத்தைப்போல, நீயும் இம்மனையைப் பிரியாது இவளுடன் கூடியிருத்தல் தான் நினக்குப் புகழ் தருவது; அதுவே ஊராண்மைச் செயல்' என அறிவுறுத்துவது இது. 13. சிறுவன் உடையேன். தலைவன் ஒருவன்,தன்னுடைய மனைக்கிழத்தியை மறந்து, தன் உள்ளங் கவர்ந்தாளான பரத்தை ஒருத்தியது மயலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/100&oldid=761780" இலிருந்து மீள்விக்கப்பட்டது