பக்கம்:ஐந்திணை வளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஐந்திணை வளம் 'ஒன்றன் உண்மையை உணர்ந்து கொள்வது என்பது எப்போதும் உயிருக்கு ஊதியம் தருவதல்லவா!' இவ்வாறு கூறிச் சமாதானம் அடைகின்றாள் தலைவி. ஊதைக் காற்றுப்போல அவன் பிரிவும் தன்னை வருத்துவதாயிற்று என்பதனைக் கூறுவாள், ‘ஊதை எடுக்கும் துறைவனை என்றாள். அதுவும் தன் செயலால் தலைவிக்கு வந்துறுகின்ற துயரத்தை நினையாது வீசுகின்றதுபோலவே தலைவனின் செயலும் இருத்தலால், அவனைப் பேதையான்' என்றாள். தன்னை வெறுத்துக் கைவிட்டானாக வஞ்சகம் செய்தான் என்பதினும், பிரிவினால் நாம் உறும் துயரினை அறிந்துணர இயலாத பேதையான் என்று அறிதல் நன்று என்பாள். பேதையான் என்று உணரும் நெஞ்சும் இனிது’ என்றனள். உண்மை உயிருக்கு ஊதியமாவது, அது உயிரைத் தளராதபடி காத்தலால். தலைவியின் இந்த மறுமொழி, தன்னுடைய சிறப்பை உணர்த்துதலால், தலைவன் மேலும் மிக்கெழுந்து பெருகும் காதலினை உடையவன் ஆவான் என்பது இதன் பயன் ஆகும். 2. நின்னல்லது இல் களவிலே கலந்து வாழ்கின்ற வாழ்க்கையிலே இனிமையுள்ளதென்பது உண்மையானாலும், அதனால் நேர்கின்ற தொல்லைகளும், வருவதான இடர்ப்பாடுகளும் தலைவியின் உள்ளத்தைத்திருமணநினைவிலேசெலுத்துகின்றன. குறிப்பாகவும், நேராகவும், அவள் பன்முறை தன் கருத்தினைத் தலைவனுக்கு உணர்த்திய போதும், அவன் விரைந்து அவளை மணந்து கொள்ளுதலிலே மனஞ்செலுத்தாதவனாக இருந்தனன். அதனால் அவன்பாற் சற்றே ஊடலும் அத்தலைவிபால் எழுகின்றது. ஒருநாள்,தோழியும் தலைவியுமாகச்சோலைப்புறத்திலே சென்றுகொண்டிருந்தனர். தலைவன் அவர்கட்கு எதிரிலே வருகின்றான். அன்று தன் நிலையை விளக்கமாகத் தெளிவு படுத்திவிடவேண்டும் எனக் கருதுகின்றாள் தலைவி. தலைவன் பால் நேராகச் செய்தியைச்சொல்லவும் அவள் உள்ளம் துணியவில்லை. அது, அவனைக் குறை கூறுவதாகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/106&oldid=761786" இலிருந்து மீள்விக்கப்பட்டது