பக்கம்:ஐந்திணை வளம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 111 அவன் வந்து வரைந்து கொண்டாலன்றி, இழந்து போன வண்ணம் மீளவும் வராதென்பதனால், அவனது வரவினை விரும்பிக் கூறியதே இதுவாகும் என்பதனையும் அறிதல் வேண்டும். - - வருவாயோ இல்லையோ, இவள் அழகையாவது திருப்பித்தருக எனச்சொல்லிக்கேட்கும் தோழியின் சொற்கள், தலைவியின் அழகழிந்த வன்மையைக் கண்டதும் அவள் கொண்டவேதனைப்பாட்டின்மிகுதியைக் காட்டுவதுமாகும். அன்றிற் பறவைகள், துணையோடு பிரியாது வாழ்கின்ற தன்மையிலே மிகமிக உறுதிப்பாட்டுடன் விளங்குவன. துணையைப் பிரியாது வாழும் அவை, துணையைப் பிரிந்து வாடியிருக்கும் தன்னுடைய நிலைமைக்கு இரங்குதல் வேண்டுமெனவும், இரங்கி அவன்பாற் சென்று தூதுரைத்துத் தலைவியினுடைய நலிவைக் கூறி அவனைத் தலைவிபால் வரச் செய்தல் வேண்டுமெனவும் விரும்புகின்றாள் தோழி. அவளுடைய வருத்தத்தின் மிகுதியினாலே அவள் நினைவோட்டம் இப்படியெல்லாம் செல்லுகின்றது. அன்றில்தான் பேசிப் புலம்புதலை உணராதென்பதனை அவள் அறியாதவள் அல்லள். எனினும், தலைவியுடைய ஆற்றாமை மிகுதி தோழி பால் அன்றிலை விளித்துத் தூதுரைத்து வருமாறு வேண்டு தற்கும் தூண்டுகின்றது. முன்செய்யுளில் வண்ணங்கைப்பட்ட தனை ஆண்மை எனக் கருதி வருவானோ என்றவள், இங்கே, 'மடமொழி வண்ணந்தா என்று உரையாய் என்கின்றாள். இதனால், பிரிவான வெம்மை தலைவியது அழகினைச் சிதைத்தது, அவளை நலியச் செய்துவிடுதலான கொடுமையினை விளைப்பது புலனாகும். இதன் கருத்தும், தலைவன் தன்னை விரைந்து வந்து மணந்துகொள்ளல் வேண்டும் என்பதே, எனினும், அதனை நுட்பமாகப் புலப்படக் கூறுகின்ற திறம் பாராட்டற்கு உரியதாகும். 9. குருகு அறியாகொல்! தலைமகன் வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து சென்றிருந்த காலத்துப் பிரிவு நீட்டித்ததாகத் தலைவியின் அமகமிங்க கன்மையைக் கண்டு தோழி, அன்றிலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/119&oldid=761800" இலிருந்து மீள்விக்கப்பட்டது