பக்கம்:ஐந்திணை வளம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 117 தன்மையைக் கொண்டு விளங்கும் அருமையினை அதனிடத்தே நாம் காணலாம். இவர்திரை நீக்கியிட் டெக்கர் மணன்மேல் கவர்கால் அலவன் தன்பெடையோடும் நிகரில் இருங்கழிச் சேர்ப்ப என் தோழி படர்பசலை ஆயின்று தோள். 'கரைமேலே ஏறிவருகின்ற அலைகளினாலே கடலினின்றும் கொண்டுவந்து போடப்பட்ட மேடாகிய மணலினிடத்தே, கவரிட்ட கால்களையுடைய நண்டானது தன் பெடையோடும் ஓடியபடியிருக்கின்ற, ஒப்பற்ற கழிக்கால்களை உடைய கடற்கரை நாட்டுத் தலைவனே! என் தோழியது தோள் நின் பிரிவினாற் படரப்பெற்ற பசலையினை உடைத்தாக இப்போது ஆயிற்று நீவந்து அதனை விலக்குவாயாக’ என்பது இதன் பொருள். - 'எக்கர் மணன்மேல்” என்று உரைத்தது. முன்னர்க் கடற்கானற் சோலையிடத்தே, அவன் தலைவியோடும் களவுறவிலே திளைத்தநிலையினைச்சுட்டிக்காட்டியதுமாகும். ‘கவர்கால் அலவன் தன் பெடை ஒடும்’ என்பதற்குக் ‘கவர்ந்த கால்களையுடைய நண்டினது பெட்டை, தன் காதலனைத் தேடியபடி ஒடிக்கொண்டிருக்கும்’ எனவும். உரைக்கலாம். 12. நெறி அறிதி! தலைவன் வரைவிடைவைத்துத்தன்னைப்பிரிந்துசென்ற வருத்தம் மேலெழத் தலைவியானவள் பெரிதும் வருத்தமுற்ற வளாக வாடியிருக்கின்றாள். கானற் சோலையிடத்தே, தாம் களவிற் சந்தித்து இன்புற்றிருந்த இடத்திற் சென்று, பழைய நினைவுகளிலே ஆழ்ந்தவளாகச் சோர்ந்தும் இருக்கின்றாள். அவளுடைய நெஞ்சத்தில் அவள் கொண்டிருந்த ஆசைக் கனவுகள் பல. அவை எல்லாம் அடியோடு சரிந்து விடுதலை நினைக்க நினைக்க, அவளுடைய உள்ளமும் உடலும் ஒருங்கே சோர்வுற்றுத் தளர்கின்றன. தன் காதலன் சொன்ன சொற்களினின்றும் தவறாதவன்; தன்னைக் களவிலே கூடியபின்மறந்து கைவிட்டுப்போய்விடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/125&oldid=761807" இலிருந்து மீள்விக்கப்பட்டது