பக்கம்:ஐந்திணை வளம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஐந்திணை வளம் "வேடர்கள் தேனிறால்களை அழித்துத் தேனைக் கொண்டு செல்வார்கள். அவர்கள் சென்றதன் பின்னர், தேனற்றுச் சிதைந்த தித்திப்பான இறால்கள் தேனடைகள் தரைக்கண்ணே ஆதரவற்றுக் கிடக்கும். "அவ்விடத்தே வரும் மான்கன்றுகள், தம் காற்குளம்பு களினாலே அந்த இறால்களை மிதித்துத்துகைக்கும். அத்தகைய வரையக நாடனே.” - தோழி, இப்படித் தன்னை விளிக்கவும், அறிவுடைய ஆண்மகனான அவனுள்ளம், அவளது சொற்களிற் பொதிந்த பொருளின்மேற் செல்லத் தொடங்குகின்றது. மலையுச்சியிலே இருந்த தேன்நிறைந்த தேனிறால்களைப் போலத் தலைவியும் உயர்குடும்பத்துப் பிறந்த இன்ப எழிலுடன் இருந்தனள். வேடர்கள் தேனைக் கொண்டு சென்றாற்போலத் தான் அவள் நலனை நுகர்ந்து சென்ற தன்மை இருந்தது. அங்ங்னம் சென்ற தான் அவளை விட்டுப்பிரிந்துதுயருள் வாடவிட்டது, தேனற்ற இறால்களை வேடர்கள் விட்டுச் சென்றாற் போன்றது. அவற்றை மான் குட்டிகள் துகைப்பது போன்று அழகழிந்து பிரிவினாலே நலிந்திருக்கும் தலைவியை அலவற்பெண்டிர்கள் அலர் உரைத்துப் பழிதூற்றுகின்றனர். ஆகவே, இனியும் வரைதற்குக் காலந்தாழ்க்குமாயின், அவர் துயரைத் தாங்காது நலிந்துபோவாள்'இப்படியெல்லாம்நினைவோட்டம் செல்ல, அவன, 'தோழி! நீ உரைப்பதனை யானும் உணராமலில்லை. விரைவிலே அவளை மணந்து கொள்வேன். நீ எது குறித்தும் கவலைகொள்ளல் வேண்டா என்கின்றான். 'அவளை வரைவதற்கு வருதலன்றிக் களவின்பத்தைக் கருதியவனாக மட்டுமே நீ இனியும் வருவாயானால், எங்கள் நிரைதொடியாகிய தலைமகள், இனி உயிர் வாழ்தலும் இலள் ஆவள். இதனை நீ அறிந்தாற்போதும்' என்று கூறிவிட்டுத் தோழியும் சென்று விடுகின்றாள். தோழி, தலைவனுக்குக் கூறுகின்ற இந்தச் சொற்களிலே, மூவாதியர், தலைவிபால் அவளுக்கிருக்கின்ற அளவிடற்கரிய அன்புச் செறிவினைக் காண்கின்றார். அவர் மனம் இறும்பூது எய்துகின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/36&oldid=761836" இலிருந்து மீள்விக்கப்பட்டது