பக்கம்:ஐந்திணை வளம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 57 எனத் தலைவியின் காதலனைத் தன் உள்ளத்துள்ளே நொந்து கொள்ளவும் செய்கின்றாள். எனினும்,தலைவியைத்தெளிவித்து ஆற்றியிருக்குமாறு சொல்லி, அவளுடைய நலிவினைமாற்றவும் நினைக்கின்றாள். 'தோழி! அவர் போயினது என்பது ஏதோ நிகழ்ந்து விட்டது. இனி, அதனை நினைந்து நீ வருந்துவது, நின் உடலையும் உயிரையும் நீயே வருத்திக் கொள்வதுதானே அல்லாமற் பிறிதேதும் நன்மை தருவதாக இல்லை. அவர் இடையிலே மனம் மாறியவராகத் திரும்பிவந்து விடுவார். என்பதும் நிகழாது. ஆகவே, சென்றவர் தம்முடைய செயலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, நல்லபடியாகத் திரும்புதலையே நீ விரும்புவாயாக’ என்று தலைவிக்கு ஆறுதலாகத் தோழி சொல்கின்றாள். தோழியின் இந்த ஆறுதல் உரைகள், தலைவியிடத்தே மேலும் வருத்தத்தை மிகுவிப்பவாக ஆயினவேயன்றி, தீர்ப்பனவாகஅமையவில்லை. அவள்,தோழியின்ஆறுதலுரையை ஏற்று.அதன்படிஅமைந்திருக்கஇயலாததன்னுடைய நெஞ்சினது தன்மையினைத் தோழிக்கு எடுத்துக் கூறுகின்றாள். ‘ஆய்ந்தெடுத்து அணிந்திருக்கும் அணிகளைப் பூண்டிருப்பவளே! ‘என் மனமானது, இப்போது நாணத்தைத் துறந்து விட்டது. தலைவருடன் சென்று, உயிரோடு அவரைக் காண்ப தையே விரும்புவதாக இருக்கின்றது. ஆனால், அவரோ, நீரற்றதும் கடத்தற்கரியதுமான சுரத்தின் வழியாகச் செல்கின்றார். அங்கே, காட்டுப் பசுக்களின் கூட்டமானது நீரினை வேட்டுத் திரிந்து கொண்டிருக்கும். அவ்வழியே செல்லும் இவர்தாம், அதனைக் கடந்தும் செல்பவர் ஆவாரோ? இதனை நினைத்துத்தான் என்நெஞ்சம் இப்போதும் துடிக்கின்றது: தலைவியின் மனநிலையை விளக்கும் இந்தப் ப்ொருள் பொதிந்த பேச்சு, மூவாதியன்ரயும் கவருகின்றது. அவர் அதனை நாமும் உணரும்படிக்கு நமக்கும் எடுத்துரைக்கின்றார். பொருட் குறைவினையாவது பொருத்துக் கொள்ளலாம்; ஆனால் அதனைத் தேடுவதற்கு ஆபத்தான முயற்சிகளிலே இறங்கும் கணவனது முயற்சிகளை ஒரு மனைவியால் பொறுத்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/65&oldid=761868" இலிருந்து மீள்விக்கப்பட்டது