பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

உதடுகளும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன! வாயிற்கதவுகளை நல்லவர்களின் வரவிற்குத் திறந்தும், திருடர்களின் வரவிற்கு மூடியும் வைப்பதுபோல, வாயின் உதடுகளையும் நல்ல சொற்களைப் பேசுவதற்காகத் திறந்தும், தீயசொற்களைப் பேசாதிருப்பதற்காக மூடியும் வைக்க வேண்டும் என்று அவற்றின் அமைப்பே கூறுவது போலத் தோன்றுகிறது.”

“தம்பி! நீ மிகவும் சிறந்தவன். சிந்தனைக் கலை உன்னிடத்தில் குடிக்கொண்டிருக்கிறது. நீ மேலும் மேலும் முயற்சி செய்யவேண்டும். நீ இப்போது கூறியவை சிறந்தவையே. ஆனாலும், என்னால் ஒப்புவதற்கு முடியவில்லை. நீ கூறுவதை நான் ஒப்புவதானால், காதுகள் இரண்டும் தீய சொற்களை கேட்பதற்காகத்தான் திறக்கப்பட்டே இருக்கின்றன என்பதை நான் ஒப்பவேண்டி நேரிடும். அது என்னால் இயலாது. ஆகவே, அந்த முடிவை மாற்று. மேலும் சிந்தனை செய். முயன்று பார் ! உம்!”

“அண்ணா! தாங்கள் கூறுவதும் உண்மைதான். எனக்கு அதற்குமேல் ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தாலும் ஒரே இருட்டாக இருக்கிறதே தவிர ஒளி வீசுவதாய் இல்லை. அதற்குமேல் சிந்தித்துத் தங்களால் உண்மையை அறிய முடியுமானால், அறிந்த அதை எனக்கும் அறிவிக்க வேண்டுகிறேன்.”

“தம்பி! நீ இவ்வளவு அறிவாளியாக இருந்தும் திடீரெனத் துப்பாக்கிக் கட்டையைக் கீழே போட்டு விடலாமா; போட்டுவிட்டால் போரின் நிலை என்னாகும்? முடியாது என்ற ஒன்று முயற்சியுடையார்க்கு இல்லை. அதை நீ எப்போதும் நம்பு. ஏனெனில் அது திருவள்ளுவரின் வாக்கு!”

“நான் ஒன்றும் அதிகமாகச் சிந்திக்கவில்லை. நீ கூறியவைகளையே கூர்ந்து கவனித்தேன். எனக்குப் புலப்படுவதெல்லாம், பார்ப்பது கொஞ்சமாக இருக்கட்டும் பேசுவது குறைவாக இருக்கட்டும்; கேட்பது அதிகமாக இருக்கட்டும் என்பதுபதான். கேள்வி ஒன்று தான்