பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



36

கேட்டு அறியவேண்டும் என்ற உணர்ச்சி சிறிதேனும் இவரிடமில்லை. இனியேனும் ஏற்படும் என எண்ணுவதற்கும் இல்லை. ஏது இவருக்குச் செல்வம்?’ என்றான்.

மணி பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தினான் . ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்று மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. களைப்பு அவனுக்கு அதிகமாயிற்று. என்றாலும் உண்மையான செல்வத்தைத் தேட அவனும், முத்துவும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுவிட்டனர்.

அடுத்த ஊரில் அருமைநாதர் என்ற ஒரு பெரும் பணக்காரர் நூல் நிலையம் வைத்துள்ளார் என்றும், நன்கு கற்றவர் என்றும், கேள்வியறிவும் நிறையப் பெற்றவர் என்றும் மணி அறிந்து முத்துவுக்கும் அறிவித்தான். இருவரும் அங்கு சென்று, அவரோடு உரையாடி அன்றைப் பொழுதைக் கழித்தனர். தான் கேள்விப் பட்ட அனைத்தும் உண்மையாக இருக்கக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் மணி.

மணி : ‘நண்பா! இவரிடத்தில் நிறைந்த வெல்வம் இருப்பதாக நாம் கண்டுவிட்டோமல்லளா?’ என்றான்.

முத்து : நண்பா! செல்வத்தைத் தேடி அலைகின்ற நாம் அதைவிட்டு வெகுதூரம் விலகி, இவ்விடம் வந்திருக்கிறோம். நாம் செல்வத்தைக் காணும் பாதையில் செல்லவே இல்லை என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என ஏங்கிக் கேட்டான்.

முத்து : ‘இம்மனிதன் கற்ற கல்வியும், கேட்ட கேள்வியும் இவனுடைய ஒழுக்கத்திற்குச் சிறிதும் துணை செய்யவில்லை. ஓட்டைச் சட்டியில் செல்வத்தை தேடினாலும் தேடலாம்; ஒழுக்கமற்றவனிடத்தில் செல்வத்தைத் தேடி, செல்வத்தை நெருங்குவதாக எண்ணி, செல்வத்தை விட்டு வெகு தாரம் விலகி இங்கு வந்துவிட்டோம். இனி வழி திரும்ப வேண்டியதுதான்’ எனக் கூறினான்.