பக்கம்:ஐயை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலுட் புகுமுன் ஒரு சில. -

பெண் உடலில் மென்மையானவள். உள்ளத்தில் வன் மை யானவள். உணர்விலோ ஆ ழ மு. ம் அகற்சியும் கொண்டவள். பல்லாயிரம் எண்னக் கால்கள் அவள் உள்ளத்தில் ஊன்றியுள்ளன; அவற்றிற்குச் சிறகுகள் உண்;ே வல்லகை உண்டு. அவ் வெண்ணங்கள் ஒன் றிலும் ஊன்ரு மலிருக்கும் வரை, அவ8ள நிலைப்படுத்த எவராலும் இயலாது. ஒன்றில் ஊன்றி விட்டாலோ அவற்றைச் சிறிதே பெயர்க்கவும் எவராலும் முடியாது! எத்துணைத்துயர் வந்தாலும் அவள் அந்நிலையினின்றும் விலகவே மாட்டாள்!

பெண்ணின் உள்ளம் மற்ருெரு பெண்ணுலும் அறியப் படாத கடலடி; மலேமுக;ே அகன்று விரிந்த வானம்! அப்படிப்பட்ட பெண்மை நிரம்பிய அந்த நெஞ்சம், தான் விரும்பிய ஒர் ஆணின் உள்ளத்தில் காலூன்றி விட்டாலோ, அங்கேயே அது நுகர்கின்றது; பசி தணிகின்றது; நிறைவடைகின்றது; அயர்கின்றது. இறுதியில் துறக்கத்தையும் அமைத்துக் கொள்ளு கின்றது.

ஒரு வித்து பூவாக மலர்ந்து, காயாக முதிர்ந்து, கனியாக நிறைவுறுதல் போல், ஒரு பெண் பேதையாய் விளங் கிப் பெண்மையாய்ச் சமைத்து, தாய்மையாய் நிறை வடைகின்ருள்! -

இம்முப்பருவங்களும் ஒருபெண்ணின் மூன்று வாழ்க்கைகள். இம்மூன்று வாழ்க்கை நிலைகளிலும் அவள் உளத் தாலும். உருவத்தாலும் ஒவ்வொரு படி உயர்ந்து விளங்குகின்ருள். -

முதல் பருவத்தில் அவளுக்கு அவளே விளங்காதவள்:

இரண்டாம் பருவத்தில் அவளுக்குப் பிறர் விளங்காதவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/11&oldid=1273468" இலிருந்து மீள்விக்கப்பட்டது