பக்கம்:ஐயை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

கொட்டிலே எண்ணிக் குமைந்தாள்-அங்குக் குதித்தோடி யாடிய குட்டிகள் எண்ணிக் கட்டிய ஆநிரை தந்த-பால்,

கட்டித் தயிர்,வெண்ணெய், மோரை நினைத்து நெட்டுயிர்ப் புற்றுளம் நைந்தாள்--காலே

நீட்டிப் படுத்தமுன் திண்ணே நினைந்தாள்! விட்டகன் றேகு முன் பார்த்தாள்-பின்

விதி செல்லும்வரை பன்முறை பார்த்தாள்! 17

அன்றைய நாட்களே எண்ணித்-தன்

அத்தையை அவள் தந்த அன்பினை எண்ணித் தொன்று கழிந்திட்ட வாழ்வை-காதல்

தோற்றிய செம்மலின் மறைவினை எண்ணிக் குன்றைக் கடத்திடும் போதில்-மேற்

குவித்துள்ள கற்களின் கதையினை எண்ணிச் சென்றுகொண் டிருந்தனள், ஐயை-விழி

சிந்திய நீரிற் கரைந்தன எல்லாம்! | 8

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/119&oldid=1273580" இலிருந்து மீள்விக்கப்பட்டது