பக்கம்:ஐயை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித் திரளுர்

பழிப்புரு ஆங்கிலப் பான்மை செறிந்தான்! அறிவியல் தெரிந்தான்; அயல்நா கரிக வெறியினில் மூழ்கி வெறுமை யுருமல் மனநலம் அழியா மாண்பொடு நின்றே இன நலங் கருதி ஏற்றமுற் றுய்ந்தான்!

இளமை பழகொடும் ஏர்ந்த,ஆண் மையொடும் வளமுறப் பொலிந்து வாலைப் பருவத்து அரிமாக் குருளேயென் ரதர்ந்துலா வந்தான்! கரிமயிர், தடந்தோள், சுடர்ந்த திருமுகம், கரிமதர்ப் பேறிய கவின் பெறு மார்பு, திரள் செறி முன்கை, திண்ணிய பொன்னுடல், உரன் பெற வலிவுற் று.ான்றிய கணக்கால், திமிர்ந்த நன்னடை, திகழொளி தெறிக்கும் நிமிர்ந்த நோக்கு, நெகிழா உள்ளுரம், அமைந்து தோன்றி, ஐயை-அன்னேஇமையாது கண்டு நெஞ்சுவந் திணிக்கும் பான்மையின் விளங்கிப் பணிவுற நின்ருன்! கான்முளே அவர்க்கென எண்ணிக் களித்தாள்!

குன்றத் தமைதி நகரினில் குலைந்தது; என்ருலும் ஐயையின் எளிமைச் செவ்வியால் புதுக்குடிச் சூழல் புதுமையுற் றிருந்தது! மதுக்குறை யாத மலர், அவள் என்னினும்

51

10

| 5

20

25

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/121&oldid=1273582" இலிருந்து மீள்விக்கப்பட்டது