பக்கம்:ஐயை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

"முத்துநகை செய்தாளே! அக்கால், என்றன்

முழுவுயிரும் ஏன் மகிழ்தல் வேண்டும்? இந்தத் தொத்துபிணி தன்னைத்தான் காதல் என்றே,

தொல்லறிவோர் மொழிந்தனரோ? ஐயோ, உள்ளம் கொத்துகின்ற பார்வையினைச் சிந்தி னளே!

கோதையினுக் கென் செய்தேன்? கொடியோள் என்னைப் பித்தாக்கி விட்டாளே; நொடிநே ரத்தில்!

பிழைப்பேனே, நான்'என்றே நினைக்க லுற்ருன்! 7

'அன்னேயவர் ஈதறிந்தால் என்நி னே ப்யார்?

அத்தெய்வம் என் பொருட்டே வாழும் அன்றே! என்னேயவர் உயர்வொழுக்கம் பெற்ரு னென்றே

இதுவரையில் நினைத்திருந்தார்; இனியென் சொல்வார்? என்னை, இது பெரும்பிழையைச் செய்திட் டேனே!

எவரிடம்போய் இதைச்சொல்வேன்? யார்ம திப்பார்? மின்னேயன்ருே பார்வையினல் பாய்ச்சிச் சென்ருள்!

மீளவந்து பேசலுற்ருல் என்ன செய்வேன்?’ 8

-என்றபடி எண்ணியெண் ணித் துயர முற்ருன். . இருந்தாலும் அவள் நினைவாங் கெழுந்தெ ழுந்து

நின்றபடி மறைந்தபடி இருந்த துள்ளம்

நெகிழ்ந்தபடி இனிமேலும் எண்ண லுற்றன் !

'சென்றபடி சொல்லிவிட்டாள்; நின்றி ருந்தால்

சேயிழையை மற்ருெருகால் கண்டி ருப்பேன்!

கொன்றபடி அவள்மனத்தைத் துயர்செய் திட்டேன்;

கொடியனென நினைப்பாளோ?" எனக்-கு மைந்தான்! 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/128&oldid=1273589" இலிருந்து மீள்விக்கப்பட்டது