பக்கம்:ஐயை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ണ്ണങ്ങധ .

ஒருவனேயே எண்ணி வாழ்ந்த கன்னி இளமான்'அவன் வந்த பொழுது, அவன் முன்னே திருநாள்போல் ஆடிப்பாடினுள்! அவனிடம் தன் மெய்க்காதலே அவள் வெளிப்படுத்திய பொழுது ட அவனும் தன் உள்ளத்தைத் திறந்து காட்டினன்...! ஆனல் அவன் உள்ளத்தில் இருந்தவள் வேறு!-உடனே.

ஆடல் மயிலுக்கு கால் முறிவானது போல்’ 'பாடற் குயிலுக்கு அம்பு பட்டது போல் துடிதுடித்தாள்’ ஆளுல் ...அவளுக்காக உயிரையே வைத்திருந்த அவனின் அன்னையோ,-குமைவுறும் காதற் குயிலைப் பாரடா!

கன்னி அன்றிலக் கண்ணுல் காணடா’-எனக்கூறி அவன் ஏற்றுக்கொள்ள மகனிடம் இறைஞ்சினுள். ஏலா மகனிடம், "தாய் அல்லள் உனக்கு நான்; . இறுக்கிக் கொண்டேன் என் உள்ளம்; எழுந்து போ-என வெய்ய உரைத்தாள். வீசிய வேல்போல், தாவி வெளிச் சென்ருன் தனிமகன்! ஆவி போனது போல் அலறிஞள் ஐயை!

இப்படிச் செல்கின்றது. பாவியம்? இறுதியில் நிற்பவள்........!? ஐயை! ஐயை! ஐயை!!! அவளுக்குத்துணை...? குன்றம், குடில், கொட்டில், ஆநிரை, ஆட்டுக்கூட்டம், ஓர் அரிமாப் பிள்ளே! இறுதியில் இக்காட்சி இயற்கை வண்ண ஒவியமாக நம் நெஞ்சத்திரையில் எழுதப் பெறுகின்றது! ஒரு பெருமூச்சு, ஒருதுளிக் கண்ணிரோடு பாவியம் முடி கிறது!

பாவை. நடவரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/14&oldid=1273471" இலிருந்து மீள்விக்கப்பட்டது