பக்கம்:ஐயை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ம் பகுதி

கொச்சி மஞ் சள் குழைத் தே,முகம் பூசிச்செஞ்

சாந் தணித் தே,விழி மையெழுதி அச்சினில் வார்த்த,பொன் மேனியில் சிற்ருடை ஆர்ந்திடச் செம்மல்முன் நின்றதுபோல், பச்சைக் கிளிவந்து நின்றி.டப் பார்த்தவன் பக்கலில் நின்றதன் தாய்மறந்தே உச்சிமுதல் உள்ளங் கால்வரைக் கண்டுளம்

ஊறிய தெண்ணி உளம் மகிழ்ந்தாள்!

தோளில் அனைத்திடுஞ் சின்னஞ் சிறுவனப்த் தோன்றி யிடைசுற்றி வந்ததையும், நாளில் அவனொரு காளைய கிை,யந்

நங்கைமுன் நின்றதல் காட்சியையும், வாளில் சிதைப்பது போல்விழி யால்,அவன் மார்பைச் சிதைத்தவள் வாய்மொழியும், நீள நினைத்தவள் நெட்டுயிர்த்தாள்; அந்த

நேரிழை தும்பைக் குளம் நெகிழ்ந்தாள்!

முத்தைப் பழித்த முறுவல் செய்தே, அவள்

முன்பு நடந்த கதையனைத்தும், நித்தநித் தம் அவன் பார்வைக்கு நூலிடை நேரும் வழியெதிர் பார்ப்பதுவும், பித்த வெறியுடன் தன்னிடம் கூறி, அப்

பேதை மணஞ்செய்ய வேண்டியதும், அத்தை யிடமன்று சொன்னது போலவே

ஆயிழை சொன்ன திறம் வியந்தாள்!

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/140&oldid=1273601" இலிருந்து மீள்விக்கப்பட்டது