பக்கம்:ஐயை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

நிகழ்ச்சியைத் தொடங்கினன்; நிவந்தமுன் வரிசையில்

திகழ்ந்திருந் தனரே ஐயையும் சேரனும்!

வெள்ளுடை அவள் தன் மேனியில் விசவ உள்ளம் ஆர்வமாய்ச் சேரனின் உரைக்குக் காத்திருக் கையிலே, கண்களே விசித்துப் பூத்த முகத்தொடு குறிஞ்சியுட் புகுந்தே, ஐயையைக் கண்டாங் கழகுற வணங்கிப் பைய வந்து, அவள் பக்கத் தமர்ந்தாள்!

குறிஞ்சி வந்ததும் குசுமுக வொலியும் உறிஞ்சுமூக் கோசையும் உரக்க வெழுப்பி மாணவர் நகைத்ததை மனதை வுடனும் வினவர் வாழ்க்கை எனும் வெதுப் புடனும் ஐயையும் கண்டாள்! குறிஞ்சியின் அழல்முகம் வெய்யச் சிவந்தது; விழி வெறுப் பு:மிழ்ந்தது! சேரன் முகத்தினைச் சிறக்கணித் தெழுந்து தேசாய் மேடைக்குச் சென்ருங் கமர்த்தான்!

தலைவர் முன்னுரை தாம்நிகழ்த் துகையில் அலைச்சிரிப் பிடையிடை ஆர்த்தனர் மாணவர்! அறிவு வேட்கைக் கங்காக்கும் நாளில் குறியொன் றில்லாக் குருட ராகி வெறிபிடித் தலையும் வீணர் போல - நெறிபிறழ்த் திப்படி நெகிழ்வுற் றிருக்கும் மாணவர் நிலைக்கு மங்கையும் வருந்தி பேணுவ தில்லாப் பெற்ருேர் இகழ்த்தாள்!

86

40

45

56

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/156&oldid=1273617" இலிருந்து மீள்விக்கப்பட்டது