பக்கம்:ஐயை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

இவ்விழி மாணவர்க் கிடையில் தான்,என் மெய்வழி நெஞ்சின் மேன்மை அன்பினே 60 உணரா திருந்திட வேண்டும், செம்மல்-என் றணலார் மெழுகாய் ஐயை உருகினள்!

ஒரிரு மாணவர் உரைக்குப் பின்னர் சேசன் பெயரைச் செப்பினர் தலைவர் "கற்பதும் நிற்பதும்' என்னும் கருத்திலோர் 65

பொற்புரை நிகழ்த்தினன், பூவை கேட்டாள்;

"கற்பதிந் நாளில் காசுக் காகவே!

விற்பனைக் காலமிஷ் வியனுறு காலம்! எத்துறைக் கல்வியால் எத்துணைப் பொருள்வரும்? அத்தொகை கணக்கிட் டத்துறை புய்க்கக் 70 கல்விக் கொருபடி கையூட் டிருபடி செல்வம் அளித்துச் செல்வம் சேர்க்கவே மக்கள் கல்வியை மதிக்கின்ற காலம்! 'தக்க அறிவெது? மேன்மைத் தரமெது?

புரையா வாழ்வில் புகுத்தும் துறையெது? 75 வரைவிலாப் புகழை வழங்கும் நிலையெது? என்றெலாம் எண்ணி இடர்ப்பா ருேகல், தின்று குவிப்பதே வாழ்வெனத் தேர்ந்தே, இருந்த விடத்திலே இருகை நீட்டிப் . பெருந்தொகை பெறுகின்ற கல்வி பேணுமோர் 80 காலமிக் காலம்! கருத்திலாக் காலம்

... 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/157&oldid=1273618" இலிருந்து மீள்விக்கப்பட்டது