பக்கம்:ஐயை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

முற்றும் நனைந்தவர்க் கீரமும் இல்லை! முழுதும் கெட்டார்க்கு தானமும் இல்லை; கற்றுநில் லாதார்க்குக் கல்வியும் இல்லை; கானில் உறைவார்க்குப் பாதையும் இல்லை! விற்பதும் பெறுவதும் என்னும் வினைக்கலால் | 10 முற்பழங் காலத்துப் போலும் முழுமையாய்க் கற்பதும் இல்லை; நிற்பதும் இனுமிலே! எப்புது நோக்கினும் எளிமை எளிமையே!

ஆகவே, மாணவர் அனைவரும் அவரவர் வேக உணர்வுக்குத் தக்க விருப்பொ,ே I Ꮋ 5 கற்கவேண் டாதன கற்கலாம்; கற்று நிற்கவேண் ம்ே என நினைத்தலும் வேண்டா! எதுவும் கற்கலாம்; எதையும் பேசலாம்; எதுவும் செய்யலாம்; எங்கனும் இயங்கலாம்! வெந்ததைத் தின்னும் விருப்ப மாணவர் வெந்ததைத் தின்றே வெந்து போகலாம்! வேகாமல் தின்னும் விருப்ப முள்ளவர் வேகாமல் தின்று வேகாமல் நிற்கலாம்!

இதையிதை இவசிவர் இப்படி இப்படி எண்ணுதல் பேசுதல் இயற்றுதல் என்னும் 125 முன்னேர் ஒழுக்கும் முழக்கும் எழுத்தும் மண்ணுய்ப் போக: மண்ணுய்ப் போகவே! கற்பது கனவு நிற்பது வாழ்க்கை இப்புதுக் கொள்கையை இங்குள மாணவர்

89.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/159&oldid=1273620" இலிருந்து மீள்விக்கப்பட்டது