பக்கம்:ஐயை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனார்.


முல்லைச் சிறுபல் முறுவல் காட்டி
உள்ளத்தவனே இருத்தி ஒண்டொடி
குன்றக் குவட்டில் அமர்ந்து, குமிழ் விடும் 10
ஒன்றிய காதல் ஊர்ந்த நினைவொடு
பைம்புல் ஒன்றினைக் கிள்ளி பற்களால்
நொய்படக் கொறித்து நகர்வழி நோக்கி
இருந்தாள்! அவளின் உள்ளத் திருந்தவன்
விருந்து உண வுக்கு நினைவிற்கு வித்தே! 15

 

ஐயை நெடுநிவுை ஆழ்வாள்; அவளின்
மெய்தான் அங்கே மிதக்கும்; நெஞ்சம்
நினைவுச் சிறகால் நெடுநகர் பறந்து
புனேவின் நின்ற பொலிவோன் தன்மேல்
மொய்த்துக் கிடக்கும்! இதழ்முறு வ்லிக்கும்! 20
கையில் நெடுங்கோல்! கண்களில்மின்னல்! .

அண்டையில் மேயும் ஆடுகள்! இடையிடைக்
கொண்டை குலுங்க அவற்றைக் கூட்டுவாள்!
உயர்ந்த நெடுங்கிகள் இ8லகளை உதிர்ப்பாள்!
அயர்வாள் என்னினும் உள்ளம் அயராள் 25
ஆட்டுக் கூட்டமோ அவளுணர் வறியாது
மேட்டில் ஏறும்; பள்ளத் திறங்கும்!
ஒட்டி ஒருபுறம் சேர்ப்பாள். ஒருநொடி!
மீண்டும் நெஞ்சில், அவனுரு மின்னும்!

 

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/16&oldid=1273473" இலிருந்து மீள்விக்கப்பட்டது