பக்கம்:ஐயை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

ஏற்றுக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன்; மாற்றுக் கருத்துளார் மக்க ளாய் இராச்'

-என்று வேகமாய்ச் சேரன் இடியென

நின்று முழக்கினன்: திசழ்த்திய உரைகேட்(டு) ஐயை விழிகளில் அருவி வழிந்தது! மெய்யாய் ஈன்ற தும் பை'யிம் மேன்மையைக் கண்டு களிக்கவும் காதால் கேட்கவும் ஆங்கிலே யே,என உள்ள மும் அழுதது! தாங்கிலா இன்பினல் தணிந்தது நெஞ்சம்!

சேரனின் உரையால் மாணவர் செருக்கின் ஆச வாசம் அடங்கி யிருந்தது! அலேயலை யாக மகிழ்ச்சி ஆர்ந்தது! தலைவரும் அவனைத் தட்டிக் கொடுத்தார்! பின்னர், தலைவர் நெய்தல்'-என் பெண்ணே "என்றும் மாருத நிலைகள்'-என் தலைப்பில்

பேசுதற் கழைத்தார்; பிழையிலா ஐயையும் ஆசையால் அவளை ஆங்கெதிர் பார்க்கையில்,

"தவழும் மின்னலோ? தகைவான் வில்லோ? பவழக் கொடியோ? பால்நிலா நழுவியோர் மங்கையா உருப்பெற்று மணிநடை யிட்டதோ? பொங்கும் அருவியோ? பொலிந்தபூக்காடோ? நீல மயிலோ? நித்திலச் செல்வியோ? கோலப் பதுமையோ? குவிந்த எழிலெலாம் தத்து நடையிடத் தாவி வந் ததுவோ?

90

130

| 35

! 40

|45

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/160&oldid=1273621" இலிருந்து மீள்விக்கப்பட்டது