பக்கம்:ஐயை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

உள்ளதை உன்ர்தல் உள்ளல் ஆகும்! திலைத்ததை அறிதல் நினைத்தல் ஆகும்! மண்ணியது ஒர்தல் முன்னுதல் ஆகும்! எண்ணெனின் கூர்மை, எண்ணுதல் கூர்தல்; எண்ணலும் எழுவதும் எண்ணும் எழுத்தும்! உண்ணல் உறங்கல் உறல்,ஆங் குவத்தல் பண்ணல் பயிறல் எண்ண விளைவுகள்!

அறிவியல் தெரிவால் அனைத்தும் தன்வயத் துறுவன என்றே மாந்தன் உவப்பான்! இயற்கையை வென்றதா இறுமாப் புறுவான்! இயற்கையுள் இவனும் இயங்குவ தறியான்! புறத்துப் பொருளெலாம் புலந்திரி வனவே! அறத்தின் நிற்ப அகநிலைப் பொருள்கள்!

புதுதல் என்பது புறத்துறு வெழுச்சி! பூதப் பொருள்களே புறமா றுவன! உள்ளம் உள்ளது; யாண்டும் ஒளிர்வது! வெள்ளமா வளியா விளங்கும் ஒளியது! உள்ள நிலையெலாம் உள்ள நிலைகளே! தள்ளும் நிலையெலாம் பூதத் தளைகளே!

என்றும் இன்பமே உள்ளத் தியல்பாம்! ஒன்றுந் துன்பமோ உள்ள நெகிழ்ச்சி! துன்பம் என்பது புறத்தே தோன்றுதல்! இன்பம் என்பதோ இருந்திடும் உணர்வு! தோன்றும் பிறவெலாம் தொலைகின்ற உணர்வே!

93

205

2 jt)

215

220

225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/163&oldid=1273624" இலிருந்து மீள்விக்கப்பட்டது