பக்கம்:ஐயை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

ஆன்றிருப் பனவோ அழியா உணர்வுகள்! பொய்யினே என்றும் எவரும் போற்றி டார்! மெய்யினை என்றும் எவரும் தூற்றிடார்! அறயில் வினைகளே அனைவரும் தவிர்ப்பர்: மறயில் வினைகளே என்றுமே மதிப்பர்! 230 உயர்ந்த எண்ண மும் உயர்ந்த செயல்களும் மயர்விலா தென்றும் மதிக்கவே பெறுவன! ஒழுக்கம் என்றுமே இழுக்க முரு து! மழுக்கம் என்றுமே மதிப்புப் பெருது'

பொய்யதும் என்றும் பொய்யே! பொய்யறு 235 மெய்யதும் என்றும் மெய்யே வாழ்க்கை மெய்யின் பாலதே; மேன்மையும் அதுவே! எய்யும் சிறுவினைச் சிறப்பெலாம் என்றும் மாறுதல் உறுவன மாத துள்ளம்1 மாறுதற் பொருளால் மாரு மனத்தினே 240 வேறுபட் டியக்கித் துன்பினை விகளப்பீர்! மாந்தரை மீமிசை மாந்தராய்ச் செய்யும் ஆர்ந்த எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் என்றும் மாருமல் இருக்கும் நிலைகளே! அன்றைய அறமே இன்றைய அறமும்; 245 என்றுமே அமுத்தான் இறைமையும் ஆகும்! என்றுமே அதுதான் இன்பமும் தேவையும்! மதிகெடக் கேடுறு மனககோட் டத்தர் எதினும் இன்புருர்; எதனையும் இழிப்பார், அறிவுக் கோட்டமும் ஆராத் துன்பமே! 250

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/164&oldid=1273625" இலிருந்து மீள்விக்கப்பட்டது