பக்கம்:ஐயை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

அறியாமை அகலல் அனைத்தினும் இன்பம்! மனவிருள் நீக்கலே மன்னிய இன்பம்! எனவே, மனத்தொளி ஏற்றுக இன்றே"

என்று நெய்தலங் கியற்றிய பொழிவுரை சென் ருங் கவையினர் செவியினுள் நுழைந்தே, 255 உள்ளிருள் நீக்கி ஒளிதந் துவகை வெள்ளம் பாய்ச்சிட, ஐயையும் வியந்தே, உரை முடித் திறங்கிய ஒண்டொடி தன்னை விரைந்தெதிர்க் கொண்டு, "விழுமிய ஒருரை ஈந்தனை பெண்ணுய்! என்றும் வாழ்’கெனக் 260 காந்தளஞ் செவ்விரல் கைம்மலர் பற்றித் தோள்கை சேர்த்துத் தோகையை அனைத்து வாள் நெடுங் கண்ணி குறிஞ்சி வருந்த அழைத்துவந் தருகில் அமர்த்திக் கொண்டாள்!

தழைத்துப் பொலிந்த தாய்மை உணர்வினல், 265 நெய்தலும் மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்திட எய்த வாழ்த்துக்கு நன்றி இயற்றி, ஆங்கவள் சேரனின் அன்னையென் றறிந்து, பூங்குமு த முகம் நாணிப் புலர்ந்து, தான்பயில் கல்வியின் தகுதிலே கலந்து, 270 மீன் பயில் விழிகளில் அன்பு மே விட, 'அன்னய்! ஒருநாள் அடியவள் மனேக்கு

மன்னிவந் திருந்து மலர்த்துக எமை"-என வேண்டிட, ஐயையும் வியந்து மகிழ்ந்தே,

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/165&oldid=1273626" இலிருந்து மீள்விக்கப்பட்டது