பக்கம்:ஐயை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

தக்க வொருநேரம் பார்த்திருந்தே -நெய்தல் தான் தனி கண்டு முகமலர்ந்தே -சென்று ஒக்க உரையாடி வேட்டு வைத் தாள்!-அவள் ஓங்கிய எண்ணம் சிதைத்தெறிந்தாள்!

தந்தையின் பேரறி யாதவனம்-சேரன் தாயும் ஒழுக்கம் இலாதவளாம்!-என வெந்த உளத்துக் குறிஞ்சிசொன்குள்-தூய வெள்ளை மனங்கொண்ட நெய்தலின்பால்!

தன்னே வந் தன்னவன் காதவித்தான்-அவன்

தாயும் அதற்குக் கருத்திசைந்தாள்-அதன் பின்னே யவர் நிலை கண்டறிந்தே--மணப்

பித்தத் தெளித்ததாய்ப் பீற்றிக்கொண்டாள்!

ஊருராய் மாறி வருபவ ராம்-எங்கும் ஒட்டும் உறவும் இலாதவராம்--வேறு யாரும் அவரை அறிந்திலராம்-என யாப்புர வாய் நன்கு கட்டுரைத்தாள்!

குறிஞ்சியின் தீத்திறங் கண்டிருந்தும்-அவள் கோள்மொழி சொல்லல் அறிந்திருந்தும்-அவள் எறிந்த இழிமொழி யாலவர்மேல்-கொண்ட ஏற்றங் குறைந்தது நெய்தலுக்கே!

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/172&oldid=1273634" இலிருந்து மீள்விக்கப்பட்டது