பக்கம்:ஐயை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜயை

சீர்நிலை திரியா வாழ்க்கை செய்தாள்! மறியும் நிரையும் கணவனின் வைப்பே 85 அரைவயி ருற்றி முதியளும் ஐயையும் ஒருமா மகனே உயர் நகர் தன்னில் பெருநிலைக் கல்வி பெறுதற் குய்த்தனர்!

பெற்ருேச் இழந்த பொற்றெடி ஐயைக்கு உற்ற உறவெல்லாம் அத்தை ஒருத்தியே! 90 மகனுக்கு ஐயையை மணங்கொள நினைத்துப் பகலும் இரவும் தெய்வம் பராவி , ஐயையைக் கண்ணென அருமையாய் வளர்த்தாள்! செய்குதளிப்பிப்பாள்; ; மேனி தேய்ப்பாள்! உடையெடுத் துடுப்பாள்; ஈர்த்தலே உலர்த்துவாள் 95 பெடையெகி னம் போல் நடக்கும் பெற்றியை விழியகற் ருமல் உவத்து வியப்பாள்! பழிமே வாமல் பாவையைக் காத்தாள்! மகற்கும் அவட்கும் மணநாட் போதில் தகுசிர் வழங்கிடத் தனிப்பொருள் சேர்த்தாள்! 100 விழிப்பினும் உறக்கத்தும் வினேசெய் பொழுதினும் களிப்பினும் துயரினும் கன்னியும் மகனும் விழியிலும் நெஞ்சிலும் விற்றே இருந்தனர்1 மொழியக் கேட்பின் ஐயையின் மொழியே! - கிளியுங் குயிலும் கிறக்கம் கொள்ளாள்! 105 கிளிமொழி தன்னுரை கள்ளாய் அருத்தினுள்!

எகினம் - அன்னம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/21&oldid=1273478" இலிருந்து மீள்விக்கப்பட்டது