பக்கம்:ஐயை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்.

துநிறை விளக்கம் துலங்க ஏற்றி 155 நொய்க்கொழுஞ் சோற்றில் நெய்விட் டளவி ஐயைக் கிட்டுத் தானும் அருந்தி மூன்றிலிற் காய்ந்த முழுநிலா வொளியில் அன்றிலை அமர்த்தி "ஐயை! உன் அத்தான் எழுதிய முடங்கல் எனக்கே ஆகலின் # 60 கொழுங்கொடி நின்னைக் குறித்திலன் போலும்! ஒன்றுகாண் உண்மை; உனக்கென எழுதின் "ஒன்றிய உளமே உயிரே என்று பலபடப் புகழ்ந்து பதைப்புறும் உனக்குச் சிலபல எழுதிச் சிரித்திட வைப்பான்! 165 இனிவரின் உனக்கே எழுதிடச் சொல்வேன்; - தனிநான் இனி"யெனத் தகவுற மொழிந்தாள்! இளம்பூங் கையால் இவள்வாய் பொத்தி 'உளத்தின் தெய்வமே உரையேல் அவ்வுரை: என்பிழை பொறுப்பீர்' என்றுரை சாற்றிப் 170 புன்கணிர் கடைவிழி புலர்ந்திட அத்தையின் உள்ளுயிர் அன்பை எண்ணி உவந்தாள்! கள்ளவிழ் கோதைக்குக் கதைபல கூறி உட்குடில் புகுந்தார் உறங்க1 நட்புறு தன்னுள் நினைத்தாள் நங்கையே! I75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/24&oldid=1273482" இலிருந்து மீள்விக்கப்பட்டது