பக்கம்:ஐயை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெய்ய கனவில் செம்மலும் வந்தான்! நாணி ஒடுங்கி, நங்கை நின்ருள்! காணுதல் இன்றிக் காக்ள நகர்ந்தான்! தோகை அவனைத் தொடர்ந்து பின் சென்ருள்! பாகியல் மொழியைப் பார்க்கவும் வெறுத்து நெடுங் கிளை மகிழ நிழலடி அமர்ந்தான்! ஒடுங்கிய உளத்தொடும் உயிரொடும் உரையால் நடுங்கிய வாயொடும் நலிந்த உடலொடும் தொடங்கிய காதல் இசையினைத் துணித்தான்! அழுகை பொங்கிட அவனடி வீழ்ந்து தொழுத கைளால் அவனுடல் தொட்டாள்! வலிந்த கைகளால் அவள்கை வாங்கி மெலிந்த கொடியுடல் மேல்விழத் தடுத்தான்! ஊற்ருய்க் கண்ணிர் உகுத்தனள் பேதை! ஆற்ரு மைக்கே அவன் சற் றிரங்கி, ‘'வேண்டுதல் என்'னென, வேய் குழல் அவன்பால் ஈண்டிய காதல், நெஞ்சினை இறைத்தாள்! 'பொய்நின் அன்'பெனப் புகன் றன், புழுப்போல் ஐயை துடித்தாள்; ஆவியும் மெய்யும் நீயே என்ருள்: நெஞ்சு நடுங்கினுள்1 "வாய்மை உளத்தை வகிர்ந்துபார்' என்ருள்! "மெய்யோ காதல் என முன்; மின்னிழை "தெய்வமே கரி"யெனத் தேம்பி பழுதாள்! “நம்பினேன் உனை'யென நம்பி உரைத்தே அம்பொன் மணித்தோள் அனைத்துயிர் நிறுத்திக் கருங்குழல் நீவியும் கண் மலர் பொத்தியும், பெருங் கதை பேசியும் பிணைந்துடன் பாடியும், மடுப்புக வாடியும் மலரிதழ் முத்தியும், வடுப்படக் கிள்ளியும் வளைநுதல் தடவியும், உள்ளம் ஒன்றிய உறவோன் பின்னைக்

13

ஐயை

2 | 0

215

220

225

230

235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/27&oldid=1273485" இலிருந்து மீள்விக்கப்பட்டது