பக்கம்:ஐயை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்,

கள்ளவிழ் மகிழக் கடிமலர் உகுத்துத் -- தொடையல் தொடுத்துத் தோகைக்குச் சூடக் 240 கடைக்களுல் அழைத்தான்; கன்னியும் நெருங்கிளுள். அக்கால் ஒருத்தி அவரிடைப் புகுந்தே தக்கவா றவன் கை தடுத்து, 'மலரினைத் தன்குழல் சூட்டுக' என்ருள் தகவிலான் மின்னெடிப் பொழுதில் அவள்குழல் மிடைந்தான்! 245 மிடைந்த பின்றை மின்னிழை தானும் கடைநெறி யாளனும் காவின் நுழைந்து மறைந்தனர். ஐயை மனந்தீப் பற்ற அறைந்துகொண் டழுதாள்; அலறி எழுந்த்ாள்.

கண்ணிர் முத்தம் கழன்றுகொண் டிருந்தது! 250 உண்னேர் ஆவி உழன்றுகொண் டிருந்தது! குருதி உறைந்தது; நெஞ்சு குமைந்தது! பெருந்திப் பற்றி ஊரெலாம் பிழைக்க அத்தி நடுவில் அவளே ஒருத்தி சிக்கித் தவிப்பதாய் நினைவு சிலிர்த்தது! 255 முதியோள் அவள்மருங் குறங்கினுள்; வெளியே அதிர அலறியது ஆந்தை ஒன்று! சுவர்க்கோழிகளின் சுள்ளென் ஒசை அவலச் சூழற்கு அருந்துணை நின்றது! - வானத் தெங்கோ மின்னிய மின்னல் 260 கூனற் கூரையின் குறுகிய பொத்தலில் ஒளிர்த்து தேய்ந்தது இடிசிதர்ந் தொலித்தது!

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/28&oldid=1273486" இலிருந்து மீள்விக்கப்பட்டது