பக்கம்:ஐயை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்,

அதன்பின் அத்தை ஆற்றியும் போற்றியும் மதுமலர்க்குழலியைக் கெஞ்சியும் கொஞ்சியும்

ஆப்பால் அருத்தி சிறுபொழு தளாவித் தாய்போல் முகத்தைத் தாங்கி நிறுத்திப் பச்சை வாயால் பவள இதழ்மேல் இச்சிச் சென்றே ஏழெட்டு முத்தம் தந்தவள் துயரமும் தணியக் குழைந்து செந்தா மரைமுகம் சிரிக்கச் சென் ருள்!

அத்தை சென்றதும் அந்தியின் இருள்போல் அத்தனைத் துயரும் அவள்தோள் படர்ந்தது! இருப்பினும் அவன்மேல் இருந்த நம்பிக்கை ஒருமை உளத்துடன் ஓங்கி நின்றது!

நாட்கள் நகர்ந்தன; நங்கையின் உள்ள வேட்கையும் வளர்ந்தது! வரவுநாள் விரும்பி விழிமலர் நகர்வழி வெறித்து நோக்கிடும் பழியறு நெஞ்சம் பலபடப் பறக்கும்! மெய் மிக மெலிந்து பொன்னிறம் மேயும்! தொய்விடை மார்பகம் விம்மிடத் தொய்யும்! அத்தை காத்த அன்னையின் அணிகளில் மூத்துத் தொங்கலும் முன்கை வளைகளும் விண்மீன் என்ன விளங்குமுக் கணியும் கண்ணைச் சிமிட்டிடுங் காதுக் கம்மலும்

20

355

360

365

370

375

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/34&oldid=1273494" இலிருந்து மீள்விக்கப்பட்டது