பக்கம்:ஐயை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாள் போலும் திரிந்தன: ஆடுகள் மேய்ச்சல் இன்றி மேனி இ&ளத்தன! ஒச்சிக் கொடிபோ" என்றவட் குரைத்தாள்! ஐயையும் இசைந்தாள் அரைமனத் தோடு

கைக்கழி எடுத்தாள்: கட்டிய மறிகளைக் குன்றுக் கோட்டினுள் போகுமுன் கோதை வென்றவன் தன்மேல் வேல்விழி பாய்ச்சிள்ை! ஐயை சென்றபின் ஆளனும் சென்ருன்! மைப்பெருங் கல்மேல் மங்கைசென் நமர்ந்தாள்! ஆடுகள் மேய்ந்தன அமைதியாய் அவள் முன் பீடுறுங் கல்விப் பெருமகன் நின்றன்!

ஆளன் வரவை அறிகிலா திருந்த வாளமர் கண்ணிக்கு வரவை உரைக்க,

"ஆழ்ந்த எண்ணமோ ஐயை!” என வினவ. சூழ்ந்த தனிமையை எண்ணி, சுடர்தொடி, நாணி நின்றனள்; நாளெலாம் அவன்பால் மாண்பெருங் காதலைக் கூறும் மனத்தவள் ஒரு சொல் தானும் உரைக்கிலா திருந்தாள்! "மறுசொல் கூற மறுத்தனை போலும்' என்றவன் இயம்ப, ஏந்திழை அஞ்சி நின்றவன் நோக்கிளுள் நீர்விழி நிறைந்தது! ஆயிரம் கூறிட அவள்நா துடித்தது வாய்திறந் தொருசொலும் வாராது நின்றதே! இருப்பினும் தன்னுளத் திருத்துயிர் நிறுத்திய விருப்பெலாங் கூட்டி, அச்சம் வீழ்த்தி,

25

ஐயை"

430

435

449

445

450

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/39&oldid=1273499" இலிருந்து மீள்விக்கப்பட்டது