பக்கம்:ஐயை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

கொட்டிய சொற்களால் கோதையும் அவனும் 550 வெட்டுப் பட்ட விளரிள மான்களாய் உள்ளமும் உடலும் உயிரும் துடித்தனர்! முள்ளெனும் சொற்களால் முதியவள் மீண்டும் "இறுதியாய் உனக்கொன் றியம்புவேன்; இதுகேள்: உறுதி இவ்வுரை, இவ8ள நீ உளங்கொள 555 மணந்து கொள்வை யாயினென் மகன், நீ! தணந்து கைவிடில் தாயுனக் கலள், நான்; செல்வியை மணம்பெறும் எண்ணச் சீர்மையால் கல்வி புகட்டினேன்; வயிற்றைக் கட்டினேன். படித்துத் தேறினே; பகட்டில் மயங்கினே; 560

துடிப்புற என்பால் தும்பை எனுமொரு சிறுக்கியை மணப்பதாய்ச் செப்பி;ை ஆங்கெனில் இறுக்கிக் கொண்டேன் என்னுளம்; எழுந்துபோ! நானும், நான் தேடிய நால்வகைப் பொருள்களும் ஈன மகளென. இதோ, ஈங் கிருக்கும் 565 ஐயைக் களித்தேன்; அகலுக, நீ" யென வெய்ய உரைத்தாள்! வீசிய வேல்போல் தாவி நடந்தான் தனிமகன்! ஆவி போனதா அலறிஞள் ஐயையே!

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/45&oldid=1273505" இலிருந்து மீள்விக்கப்பட்டது